Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் மின்சார வாகனங்களுக்கு பல சிறப்பு சலுகைகள் - முதல்வர் அறிவிப்பால் யாருக்கு என்ன பயன் ?

Webdunia
திங்கள், 16 செப்டம்பர் 2019 (16:12 IST)
தமிழகத்தில் தயாரிக்கப்படும் மின்சார வாகனங்களுக்கு 100 % வரிவிக்கு அளிக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் கிராமங்கள் மற்றும் நகரங்களில் உள்ள சாலைகளில் சென்றுகொண்டுள்ளன. மக்களின் அதிகமான நுகர்வாலும், சர்வதேச எண்ணெய் சந்தையில்  கச்சா விலையில் ஏற்படும் மாற்றத்தாலும் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. பெரும்பாலும் விலை அதிகரித்துக்கொண்டே வருகிறது. அதிலும், கச்ச எண்ணெய் வாங்க, இந்தியாவுக்கு மிகச் சுமூகமாக இருந்த ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்யக்கூடாது என அமெரிக்க இந்தியாவின் கையை கட்டிப்போட்டுள்ளது.
 
இந்த நிலையில், சவூதி அரேபியா மற்றும் அமெரிக்காவிடம் இருந்து கச்சா எண்ணெய் பெருவதில், உடனடிப் பணம் மற்றும், அதிக போக்குவரத்துச் செலவுகள் ஆகிறது. அது உள்நாட்டு விற்பனையில் வரியுடன் எதிரொலித்து மக்களின் தலையில்  அதிகவிலையில் வந்து விழுகிறது.
 
பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயர்கிறது. இந்த வாகன எரிபொருட்களினால் இயற்கைச் சூழல்களும், காற்றும் மாசடைகிறது. இதற்கு மாற்றாக மின்சார வாகனங்களைத் தயாரிக்கவும் , இறக்குமதி செய்யவும், அவற்றை  மக்கள் பயன்படுத்தவும் அரசு ஊக்குவித்துவருகிறது.
இந்த நிலையில், இன்று, தமிழகத்தில் மின்சார வாகனங்கள் தொடர்பான கொள்கையை  தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அதில், மின்சார வாகனங்கள் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிப்பாளர்கள் மற்றும் அதைப் பயன்படுத்தும் நுகர்வோராகிய மக்கள் பயன்படும் வகையில் இந்த அறிவிப்பில் பல சலுகைகள் மற்றும் வரிகுறைப்புகள் உள்ளன.
 
மேலும் , தமிழகத்தில்  கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட  535 மின்சார பேருந்துகள் இன்னும் சில மாதங்களில் இயக்கடவுள்ளன.அதன்மூலம் புதிய வேலைவாய்ப்புகளும் உருவாகும் என தெரிவிக்கப்படவுள்ளது. 
 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments