Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2 கட்சிகளை தவிர யார் வேண்டுமானாலும் கூட்டணியில் சேரலாம்: ஜெயகுமார்

Webdunia
செவ்வாய், 5 பிப்ரவரி 2019 (17:00 IST)
நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில் தமிழகத்தின் இரண்டு பிரதான கட்சிகளான அதிமுகவும், திமுகவும் கூட்டணி அமைப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன. இரு கட்சிகளும் கிட்டத்தட்ட கூட்டணியில் சேரும் கட்சிகளை முடிவு செய்துவிட்டதாகவும், தற்போது தொகுதிப்பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதில் அதிமுக ஒரு படி மேலே போய், தேர்தலில் போட்டியிட விருப்பமனுக்களையும் நேற்றுமுதல் பெற தொடங்கிவிட்டது.

திமுக கூட்டணியில் காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக உள்ளிட்ட கட்சிகளும், அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, புதிய தமிழகம், தேமுதிக ஆகிய கட்சிகள் இணையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதே இன்னும் உறுதி செய்யப்படவில்லை' அப்படியே போட்டியிடுவது என்று முடிவெடுத்தால் அமமுக கூட்டணியில் சேர வாய்ப்பு உள்ளது.

இந்த நிலையில் தேர்தல் கூட்டணி குறித்து கருத்து கூறிய அமைச்சர் ஜெயகுமார், 'மக்களுக்கு ஏற்றவகையில் கூட்டணி அமையும் என்றும், அமமுக, திமுகவை தவிர யார் வேண்டுமானாலும் அதிமுக கூட்டணியில் சேர பேச்சுவார்த்தைக்கு வரலாம் என்றும் அழைப்பு விடுத்துள்ளார். மேலும் தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தினால் தான் நல்லது என்று அவர் தேர்தல் கமிஷனுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

11, 12ஆம் வகுப்பு மாணவிகளுக்கு மட்டும் முக்கிய தடுப்பூசி.. அரசின் அதிரடி முடிவு..!

பஹல்காம் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதிகள்யின் முதல் புகைப்படம்.. பரபரப்பு தகவல்..!

நிமிஷாவின் மரண தண்டனை ரத்து செய்யப்படவில்லை: கொலையான மஹ்தியின் சகோதரர் கருத்து..!

சதுரகிரி மலைப்பகுதியில் திடீரென பரவும் காட்டுத்தீ- பக்தர்கள் செல்ல தடை

எங்கள் கூட்டணியில் பாஜக.. பாஜக கூட்டணியில் சில கட்சிகள்.. எடப்பாடி பழனிசாமி விளக்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments