காங்கிரஸ் மூத்தத் தலைவர் ஈ வி கே எஸ் இளங்கோவன் காலமானார்!

vinoth
சனி, 14 டிசம்பர் 2024 (10:50 IST)
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மற்றும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், உடல்நலக் குறைவு காரணமாக சமீபத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இளங்கோவனுக்கு நுரையீரல் சார்ந்த பாதிப்பு இருந்ததை அடுத்து அதற்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்  சென்னை மியாட் மருத்துவமனையில், ஒரு மாதத்திற்கு மேலாக செயற்கை சுவாச உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் இன்று காலை முதல் அவருடைய உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டார தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் தற்போது அவர் சிகிச்சைப் பலனின்றி காலமாகியுள்ளார். அவருக்கு வயது 75.

பாரம்பரியம் மிக்க அரசியல் குடும்பத்தில் பிறந்த ஈ வி கே எஸ் இளங்கோவன், தந்தை பெரியாரின் அண்ணனின் பேரனாவார். ஈ வி கே சம்பத்தின் மகன் ஆவார்.  தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக செயல்பட்டுள்ளார். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வரும் தேர்தலில் தவெக முன்னிறுத்தும் கொள்கைகள் என்ன? இளைஞர்களை ஈர்க்குமா?

தவெக கூட்டணியில் டிடிவி தினகரன் ஓகே? ஓபிஎஸ்-க்கு விஜய் மறுப்பா?

தமிழகம் வருகிறார் அமித்ஷா.. பாஜகவின் பிரமாண்டமான பொதுக்கூட்டம்.. ஈபிஎஸ் கலந்து கொள்வாரா?

பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க ரூ.248.67 கோடி ஒதுக்கீடு.. தமிழக அரசு அரசாணை..!

மீண்டும் தலைகீழாக குறைந்தது தங்கம் விலை.. ஒரு சவரன் ஒரு லட்சத்திற்கும் கீழ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments