கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தார் ஈவிகேஎஸ் இளங்கோவன்! மருத்துவமனை அறிக்கை..!

Webdunia
புதன், 22 மார்ச் 2023 (14:55 IST)
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ இளங்கோவன் கொரோனா தொற்றிலிருந்து குணமாகிவிட்டதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.
 
சமீபத்தில் நடைபெற்ற ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வெற்றி பெற்று எம்எல்ஏவாக பதவியேற்ற ஈவிகேஎஸ் இளங்கோவன் கடந்த சில நாட்களுக்கு முன்னால் உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
 
முதலில் அவருக்கு நுரையீரல் பாதிப்பு என்று கூறப்பட்ட நிலையில் அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனை அடுத்து அவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதாகவும் தெரியவந்ததை அடுத்து கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. 
 
இந்த நிலையில் தற்போது அவர் கொரோனா தொற்றிலிருந்து குணமாகிவிட்டார் என மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. இருப்பினும் அவர் இருதய பாதிப்புக்காக தீவிர சிகிச்சை பிரிவில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கடந்த ஆண்டை விட கிட்டத்தட்ட இருமடங்கு உயர்வு.. தீபாவளி டாஸ்மாக் விற்பனை எத்தனை கோடி?

என் தந்தை என் மனைவியை திருமணம் செய்து கொண்டார்.. மரணத்திற்கு முன் இளைஞர் வெளியிட்ட வீடியோவால் அதிர்ச்சி..!

சொந்த கட்சி வேட்பாளருக்கு எதிராக பிரச்சாரம் செய்யும் தேஜஸ்வி யாதவ்! என்ன காரணம்?

வங்கக்கடலில் புயல் உருவாகுமா? வானிலை ஆய்வு மையத் தலைவர் அமுதா சொன்ன அப்டேட்

தீபாவளி முகூர்த்த பங்குச்சந்தை வர்த்தகம்.. சென்செக்ஸ், நிஃப்டியில் ஏற்றமா?

அடுத்த கட்டுரையில்
Show comments