Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நேரு குடும்பம் இல்லா காங்கிரஸ் தலைமை; தலையில்லாத மனித உடலைப்போல... ஈ.வி.கே.எஸ் ட்விட்!!

Webdunia
திங்கள், 24 ஆகஸ்ட் 2020 (11:57 IST)
நேரு குடும்பம் இல்லா காங்கிரஸ் தலைமை தலையில்லாத மனித உடலைப்போல என ஈ.வி.கே.எஸ் தெரிவித்துள்ளார். 
 
கடந்த ஆண்டு மக்களவை தேர்தலில் காங்கிரஸ் தோல்வியடைந்த நிலையில் அதற்கு தார்மீக பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பதவி விலகினார். காங்கிரஸ் பிரமுகர்கள் பலரும் வலியுறுத்தியும் பதவியில் நீடிக்க அவர் மறுத்து விட்டார். இதனால் காங்கிரஸ் கட்சியின் தற்காலிக தலைவர் பொறுப்பில் சோனியா காந்தி இருந்து வருகிறார்.
 
இந்நிலையில் அகில இந்திய காங்கிரஸின் தலைவர் பதவிக்கான நபரை தேர்ந்தெடுக்கும் செயல்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. ஆனால் தலைவர் பதவியில் சோனியா காந்தி குடும்பத்தினர் யாரும் வர மாட்டார்கள் என ராகுல் காந்தி தெரிவித்தார். இதனை பிரியங்கா காந்தியும் ஆமோதித்தார். 
 
தற்போது காங்கிரஸுக்கு புதிய தலைவர் தேர்தெடுப்பதைக் குறித்த விவாதமும், காங்கிரஸ் காரியக் கமிட்டி இன்று குழு கூடியுள்ள நிலையில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தனது டிவிட்டர் பக்கத்தில், நேரு குடும்பத்தின் தலைமையில்லாத காங்கிரஸ் என்பது தலையில்லாத மனித உடலைப் போன்றது. நாட்டுக்கும், கட்சிக்கும் அவர்கள் அளித்திருக்கும் பங்களிப்புதான், பாசிச ஆட்சிக்கு எதிராக நாட்டை இன்னும் தக்கவைத்துக்கொண்டு இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் இருந்து ராணா வருகை எதிரொலி: முக்கிய மெட்ரோ ரயில் நிலையம் மூடல்..!

கோவில் மேல் விழுந்த பழமையான ஆலமரம்.. பலர் பலி என அச்சம்..!

இன்று குருமூர்த்தியை சந்தித்த அண்ணாமலை.. நாளை அமித்ஷா - குருமூர்த்தி சந்திப்பு.. பாஜகவில் பரபரப்பு..!

துண்டுச்சீட்டில் கேள்விகளை எழுதி கொடுத்த திமுக எம்பி.. இந்த கேள்விகள் மட்டும் தான் கேட்க வேண்டும்?

நாளை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments