Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜயபாஸ்கர் வீட்டில் இருந்த தினகரனை சிக்க வைக்கும் ஆதாரம்!

விஜயபாஸ்கர் வீட்டில் இருந்த தினகரனை சிக்க வைக்கும் ஆதாரம்!

Webdunia
செவ்வாய், 11 ஏப்ரல் 2017 (17:29 IST)
கடந்த 7-ஆம் தேதி தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக விடிய விடிய சோதனை நடத்தினர். அப்போது சில ஆவணங்கள் தினகரன் தொடர்பாக இருந்ததாகவும் அந்த ஆவணங்கள் திட்டமிட்டபடி மறைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.


 
 
விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடக்கும் போதே டெல்லி தமிழக சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் வருமான வரித்துறையை விமர்சித்து பேட்டி கொடுத்துக்கொண்டு இருந்தார். அதில் வருமான வரித்துறை விஜயபாஸ்கரை மிரட்டுவதாக கூறினார்.
 
அதன் பின்னர் விஜயபாஸ்கரின் வீட்டின் முன்னர் அமைச்சர்களுடன் சென்ற தளவாய்சுந்தரம் அராஜகமாக வாக்குவாதம் செய்து வீட்டின் உள்ளே நுழைந்து சில ஆவணங்களை விஜயபாஸ்கரின் கார் டிரைவர் உதவியுடன் அழிக்க முயற்சித்தார்.
 
அமைச்சர் விஜயபாஸ்கரின் வீட்டில் தினகரன் தொடர்பான ஆவணங்கள் இருப்பது தெரிந்துதான் தளவாய்சுந்தரம் அங்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறார். அந்த ஆவணங்களை மதில் சுவர் வழியாக தூக்கி எரிந்து வருமான வரித்துறைக்கு கிடைக்காத வகையில் செய்துவிட்டார் தளவாய்சுந்தரம்.
 
அந்த ஆவணங்கள் வருமான வரித்துறையிடம் சிக்கியிருந்தால் தினகரனும் வசமாக அவர்களிடம் சிக்கியிருந்திருப்பார் என ஆளும் கட்சி வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. இதனை தளவாய்சுந்தரமும், விஜயபாஸ்கர் வீட்டில் இருந்த வேலையாட்களும் திட்டமிட்டே செய்ததாக கூறப்படுகிறது.

2 வயது பச்சிளம் குழந்தை சர்க்கரை நோய்க்கு பலி.. தேனியில் அதிர்ச்சி சம்பவம்..!

தமிழகத்தில் ஜூன் 19 வரை மழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

பாஜக தோல்விக்கு மாநில தலைவர் தான் காரணம்.. அரைநிர்வாண போராட்டம் நடத்தியவர் டிஸ்மிஸ்..!

சனி, ஞாயிறு, திங்கள் தொடர் விடுமுறை: திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள்..!

மின்னணு வாக்கு எந்திரங்கள் ஹேக் செய்யப்படும் வாய்ப்பு உள்ளது… எலான் மஸ்க் கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments