ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர் முன்னிலை.. நாதகவுக்கு எவ்வளவு ஓட்டு?

Mahendran
சனி, 8 பிப்ரவரி 2025 (08:56 IST)
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு சமீபத்தில் இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன.

ஈரோடு கிழக்கு தொகுதியில் முக்கிய அரசியல் கட்சிகளான அதிமுக, பாஜக உட்பட அனைத்து எதிர்க்கட்சிகளும் போட்டியிடாமல் புறக்கணித்திருந்தன. இதனால், ஆளும் கட்சியான திமுகவுக்கு எதிராக நாம் தமிழர் கட்சி மட்டுமே போட்டியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போதைய முன்னிலை நிலவரப்படி, திமுக வேட்பாளர் சந்திரகுமார் 5,567 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்  489 வாக்குகள்  மட்டுமே பெற்றுள்ளார். இருவருக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் 5,000-க்கு மேல் அதிகமாக உள்ளது.

இதனால், ஈரோடு இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் வெற்றி பெறுவது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கருப்பு சட்டை போட்டு சம்பவம் பண்ணும் ஹெ.ராஜா!.. இப்படி ட்ரோலில் சிக்கிட்டாரே!...

புதிய விமான சேவை தொடங்க இதுவே 'சிறந்த நேரம்.. இண்டிகோ பிரச்சனை குறித்து மத்திய அமைச்சர்..!

உங்கள் மனைவி குழந்தைகளை இந்தியாவுக்கு அனுப்புங்கள்: அமெரிக்க துணை அதிபருக்கு நெட்டிசன்கள் பதிலடி..!

வங்கக்கடலில் மீண்டும் காற்றழுத்த தாழ்வு நிலை: டெல்டா மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை

அதிமுக - பாஜக கூட்டணி 3-வது இடத்துக்குத் தள்ளப்படும்: டிடிவி தினகரன் கணிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments