ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: இன்று திமுக, நாதக வேட்பாளர்கள் மனு தாக்கல்..!

Siva
வெள்ளி, 17 ஜனவரி 2025 (08:05 IST)
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் ஆகும்.

பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற இருக்கும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 10ம் தேதி தொடங்கியது. முதல் நாளில் மூன்று சுயேட்சை வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

பின்னர் 11 மற்றும் 12ஆம் தேதிகளில் விடுமுறை தினமாக இருந்ததால், 13ஆம் தேதி ஆறு பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். பொங்கல் பண்டிகைக்காக மூன்று நாட்கள் தொடர் விடுமுறை இருந்ததால், இன்றுதான் வேட்புமனு தாக்கல் செய்ய முடியும் கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை எந்த அரசியல் கட்சியின் வேட்பாளர்களும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. இன்று திமுக வேட்பாளர், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் உள்ளிட்டவர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்பு உள்ளது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாளை வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்படும். 20ஆம்தேதி வரை வேட்புமனுவை வாபஸ் பெறலாம். பின்னர் பிப்ரவரி 5ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். வாக்குகள் எண்ணிக்கை பிப்ரவரி 8ஆம் தேதி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவில் ஓபிஎஸ், டிடிவி தினகரன் இணைவார்களா?!.. என்ன சொல்கிறார் செங்கோட்டையன்?!...

கோவை வந்த செங்கோட்டையன் பயணம் செய்த விமானம் பெங்களுருக்கு திருப்பிவிடப்பட்டது.. என்ன காரணம்?

'டிட்வா' புயலால் பாம்பனில் சூறைக்காற்று, தனுஷ்கோடியிலிருந்து மக்கள் வெளியேற்றம்!

பீகாரில் காங்கிரஸ் தோல்விக்கு காரணம் ராகுல், பிரியங்கா தான்: அகமது படேலின் மகன் பகீர் குற்றச்சாட்டு

வாக்காளர் பட்டியல் திருத்த பணிக்கு மாணவர்களை பயன்படுத்துவதா? ஆசிரியர்கள் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments