தனியாக சந்தித்து பேசிய ஸ்டாலின் – ஓபிஎஸ்? – எடப்பாடியார் குற்றச்சாட்டு!

Webdunia
புதன், 19 அக்டோபர் 2022 (10:27 IST)
தமிழ்நாடு சட்டசபையில் ஓபிஎஸ்க்கு இடம் அளிக்கப்பட்டது குறித்து கண்டனம் தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி, முதல்வர் அதிமுகவிற்கு எதிராக சதி செய்வதாக கூறியுள்ளார்.

அதிமுகவிலிருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்டு, அவரது எதிர்க்கட்சி துணை தலைவர் பதவி இனி செல்லாது என கடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். ஆனால் தற்போது நடைபெற்று வரும் சட்டமன்ற கூட்டத்தில் எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கை ஓபிஎஸ்க்கு ஒதுக்கப்பட்டது.

சபாநாயகரின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்த எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் இன்று வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரத போராட்டத்தை நடத்தினர். ஆனால் அனுமதியின்றி போராட்டம் நடத்தியதால் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டனர்.

ALSO READ: நீண்ட காலம் கழித்து 2 ஆயிரத்திற்கும் கீழ் பாதிப்புகள்! – இந்தியாவில் கொரோனா!

இதுகுறித்து பேசியுள்ள எடப்பாடி பழனிசாமி “நேற்று சட்டமன்றம் முடிந்த பிறகு முதல்வர் ஸ்டாலினும், ஓ.பன்னீர்செல்வமும் அரை மணி நேரம் பேசியுள்ளனர். அதிமுக கட்சி முடிவுகள் மற்றும் பொருப்பாளர்கள் பட்டியல் சபாநாயகருக்கு வழங்கப்பட்டிருந்த போதும் அதை மீறி ஓபிஎஸ்க்கு இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது. அதிமுகவை ஒழிக்க முதல்வர் செய்யும் முயற்சிகள் பலிக்காது” என்று கூறியுள்ளார்.

Edited By: Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

AI அனைத்து வேலைகளையும் செய்யும், இனிமேல் மனிதர்களுக்கு சுதந்திரம் தான்! எலான் மஸ்க்:

செம்பரப்பாக்கம் ஏரியை திறக்க என்னை ஏன் கூப்பிடவில்லை: செல்வப்பெருந்தகை ஆவேசம்..!

டெல்லி தாஜ் ஹோட்டலில் சர்ச்சை: 'பத்மாசனம்' போட்டு அமர்ந்த பெண்ணுக்கு அவமதிப்பு?

காலையில் குறைந்த தங்கம் மாலையில் மீண்டும் குறைவு.. இன்று ஒரே நாளில் ரூ.3680 சரிவு..!

இன்றிரவு சென்னை உள்பட 26 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments