Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஈபிஎஸ் – ஓபிஎஸ் இடையே தூது செல்லும் புறாக்கள்! – சமாதானம் ஏற்படுமா?

Webdunia
ஞாயிறு, 19 ஜூன் 2022 (10:15 IST)
அதிமுக ஒற்றைத் தலைமை குறித்து ஈபிஎஸ் – ஓபிஎஸ் இடையே மோதல் நிலவி வரும் நிலையில் ஒன்று சமாதான பேச்சுவார்த்தை நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதிமுகவில் ஒற்றை தலைமை தேவை என்ற கோரிக்கை எழுந்துள்ள நிலையில் சமீப காலமாக எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர்செல்வம் தனித்தனியாக தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து சமீபத்தில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், விரைவில் அதிமுக ஒற்றை தலைமையின் கீழ் செயல்படும் என பேசியிருந்தார். மேலும் பல அதிமுக பிரபலங்களும் ஓபிஎஸ் அணி, ஈபிஎஸ் அணி என பிரிந்து ஆலோசனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் நேற்று நடந்த அதிமுக கூட்டத்தில் ஈபிஎஸ் – ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மோதிக் கொண்ட சம்பவம் நிலமையை மேலும் பரபரப்பாக்கியுள்ளது. இந்த விவகாரத்தில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஈபிஎஸ் – ஓபிஎஸ் இருவருக்கும் பொதுவான கட்சி நபர்கள் இருதரப்பு முக்கிய ஆதரவாளர்களையும் முதற்கட்டமாக இன்று சந்தித்து பேச உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கும்பமேளாவுக்கு இஸ்லாமியர்களும் வரலாம்.. ஆனால்..? - யோகி ஆதித்யநாத் விடுத்த எச்சரிக்கை!

3ம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு மாரடைப்பு?? பள்ளியிலேயே பலியான சோகம்!

பாஜகவை நோக்கி சுட்டு விரலை நீட்டுவாரா விஜய்? நீட் விவகாரம் குறித்து திமுக கேள்வி..!

அமைச்சர் சேகர்பாபுவை பார்த்தால் பரிதாபம்தான் வருகிறது: அண்ணாமலை

திருமணம் செய்ய வற்புறுத்திய பெண் கொலை.. 8 மாதங்களாக பிணத்தை பிரிட்ஜில் வைத்த நபர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments