Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்த பிரதமராக வருவதற்கு தகுதியானவர் எடப்பாடி தான்; பொன்னையன் பேட்டி..!

Webdunia
திங்கள், 12 ஜூன் 2023 (12:50 IST)
அடுத்த பிரதமராக வருவதற்கு தமிழகத்திலிருந்து தகுதியானவர் எடப்பாடி பழனிச்சாமி தான் என அதிமுகவின் மூத்த தலைவர் பொன்னையன் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். 
 
நேற்று தமிழகத்திற்கு வந்த அமித்ஷா ’தமிழகம் இரண்டு பிரதமர்களை தவற விட்டுவிட்டது என்றும் காமராஜர் மற்றும் மூப்பனார் ஆகிய இருவரும் பிரதமராக இருக்க வேண்டியவர்கள் என்றும் தெரிவித்தார். 
 
மேலும் வருங்காலத்தில் தமிழகத்தில் இருந்து ஒருவர் பிரதமராக தேர்வு செய்யப்படுவார் என்று கூறினார். இதனை அடுத்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தமிழகத்திலிருந்து பிரதமர் வேட்பாளர் தேர்வு செய்யப்பட்டால் தனக்கு மிகுந்த மகிழ்ச்சி என்றும் தமிழிசை சௌந்தரராஜன் அல்லது எல். முருகனை பிரதமர் வேட்பாளராக தேர்வு செய்யலாம் என்றும் பரிந்துரை செய்தார். 
 
இந்த நிலையில்  ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த அதிமுகவின் மூத்த தலைவர் பொன்னையன் தமிழ்நாட்டில் இருந்து பிரதமராக வருவதற்கு தகுதியானவர் எடப்பாடி பழனிச்சாமி மட்டும் தான் என்றும் உலக அரசியலை இந்திய அரசியலை தெரிந்தவர் மற்றும் விரல் நுனியில் புள்ளி விவரங்களை வைத்திருப்பவர் அவர் தான் என்றும் கூறினார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கச்சத்தீவை மீட்கும் வரை 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுக்க வேண்டும்: விஜய் ஐடியா

முட்டை வழங்கவில்லை என புகார்.. மாணவரை துடைப்பத்தால் அடித்த சத்துணவு ஊழியர் சஸ்பெண்ட்..!

ரிசர்வ் வங்கி ஆளுனர் கையெழுத்துடன் புதிய 500 ரூபாய் நோட்டு.. RBI அறிவிப்பு..!

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. டிரம்ப் வரி விதிப்பு காரணமா?

ஆதார் கார்டே ரெடி பண்ணும் சாட் ஜிபிடி? ஆதார் தகவல்கள் எப்படி AI க்கு தெரிந்தது? - அதிர்ச்சி சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments