Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கீழடி அருங்காட்சியகத்தை காண வரும் பார்வையாளர்களுக்கு கட்டணம்.. அதிரடி அறிவிப்பு..!

Webdunia
ஞாயிறு, 26 மார்ச் 2023 (20:49 IST)
கீழடி அருங்காட்சியகத்தை பார்க்க வரும் பார்வையாளர்களுக்கு இனி கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது சுற்றுலா பயணிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடி அருங்காட்சியகத்தை காண வரும் பார்வையாளர்களுக்கு ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
பெரியவர்களுக்கு பதினைந்து ரூபாய் ,சிறியவர்களுக்கு பத்து ரூபாய் மற்றும் மாணவர்களுக்கு ஐந்து ரூபாய் என்றும் வெளிநாட்டவர்களுக்கு பெரியவர்களுக்கு ஐம்பது ரூபாய் சிறியவர்களுக்கு 25 என்றும் கட்டண நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
மேலும் கீழடி அருங்காட்சியகத்தில் புகைப்படம் எடுக்க முப்பது ரூபாய், வீடியோ எடுக்க 100 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கீழடி அருங்காட்சியகத்தை இதுவரை இலவசமாக பார்த்து வந்த பொதுமக்கள் தற்போது கட்டணம் வசூல் என்ற தகவல் வெளியாகி உள்ளதை அடுத்து அதிருப்தி அடைந்துள்ளனர்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று ஆடி காா்த்திகை விரதம்: முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு.. குவிந்த பக்தர்கள்..!

இன்றிரவு கொட்டப்போகுது கனமழை.. சென்னை உள்பட 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

சேலத்தில் தவெகவின் முதல் கொள்கை விளக்க பொதுக்கூட்டம்: தேதி அறிவிப்பு..!

தீர்ப்புகள் தயாரிக்க AI தொழில்நுட்பம் பயன்படுத்தலாமா? கேரள உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!

துணை முதல்வர் நயினார் நாகேந்திரன்.. மேடையில் அறிவித்த பெண் பாஜக தொண்டரால் சலசலப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments