Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை நடக்க இருந்த பொறியியல் கலந்தாய்வு ஒத்திவைப்பு! – அமைச்சர் பொன்முடி அறிவிப்பு!

Webdunia
புதன், 24 ஆகஸ்ட் 2022 (12:05 IST)
தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் சேர்வதற்கான கலந்தாய்வு நாளை நடைபெற இருந்த நிலையில் தற்போது ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளில் படிக்க விண்ணப்பித்தோர் கலந்தாய்வு முறையில் விருப்பமான கல்லூரிகளை தேர்ந்தெடுப்பது வழக்கமாக உள்ளது. இந்த ஆண்டில் பொறியியல் படிப்புகளில் சேர சுமார் 2 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

ஆகஸ்டு 20ம் தேதி முதல் 23ம் தேதி வரை சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறும். பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு 25ம் தேதி முதல் தொடங்கும் என கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் நாளை நடைபெற இருந்த பொறியியல் பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு ஒத்திவைக்கப்படுவதாக தற்போது உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். நீட் தேர்வு முடிவுகள் இன்னமும் வெளியாகாத நிலை உள்ளதால் நீட் தேர்வு முடிவுகள் வெளியான பின் கலந்தாய்வை நடத்த திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பித்துள்ள பலர் நீட் தேர்வும் எழுதியுள்ளதால், நீட் தேர்வில் செலக்ட் ஆகும் மாணவர்கள் பொறியியல் படிப்பை இடைநிறுத்த வேண்டிய நிலை ஏற்படும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அண்ணாமலை போல் அரசியல் செய்யவே ‘காமராஜர் ஆட்சி’.. செல்வப்பெருந்தகை திட்டம்..!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை.! கேரளாவுக்கு சீமான் கண்டனம்.!!

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணி.! சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியது தமிழக அரசு..!!

ஈரான் அதிபர் இப்ராஹிம் மறைவு.! இந்தியாவில் நாளை துக்கம் அனுசரிப்பு..!!

"போகுமிடம் வெகு தூரமில்லை" திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!!

அடுத்த கட்டுரையில்
Show comments