Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செட்டிநாடு பொறியியல் கல்லூரியில் மாணவி தற்கொலை

செட்டிநாடு பொறியியல் கல்லூரியில் மாணவி தற்கொலை

Webdunia
செவ்வாய், 16 ஆகஸ்ட் 2016 (19:35 IST)
கரூர் அருகே செட்டிநாடு பொறியியல் கல்லூரியில் மாணவி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.


 


சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பகுதியை சேர்ந்த பாண்டி என்பவரது மகள் பீரித்தி ரோஜா, 19. இவர், கரூர் அருகே புலியூரில் உள்ள செட்டிநாடு பொறியியல் கல்லூரியில், விடுதியில் தங்கி இ.இ.இ., பாடப்பிரிவில், இரண்டாமாண்டு படித்து வந்தார்.

இந்நிலையில் இன்று காலை, 11 மணிக்கு கல்லூரி வகுப்பில் பீரித்தி ரோஜா மயங்கி விழுந்துள்ளார். அதிர்ச்சியடைந்த பேராசிரியர்கள், பீரித்தி ரோஜாவை அருகில் உள்ள அறைக்கு அழைத்து சென்று படுக்க வைத்தனர்.

பிறகு, மருத்துவமனைக்கு பீரித்தி ரோஜாவை  அழைத்து செல்ல ஆம்புலன்ஸ் வாகனத்தை கொண்டு வர பேராசிரியர்கள் சென்றனர். பிறகு, திரும்பி சென்று பார்த்த போது, பீரித்தி ரோஜா அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. 

தகவல் அறிந்த போலீசார், பீரித்தி ரோஜா உடலை கைப்பற்றி, கரூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தற்கொலை செய்வதற்கு முன், பீரித்தி ரோஜா எழுதிய கடிதத்தில், உடல்நிலை சரியில்லாததால், தற்கொலை செய்து கொள் வதாக இருந்தது என, பசுபதிபாளையம் போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களை கல்லூரி நிர்வாகத்தினர் வீடியோ எடுக்க கூடாது என்று உத்திரவிட்டதோடு, மீறி எடுத்தால் அடியாட்களை வைத்து அடிப்போம், என்றும் தெரியவந்துள்ளது.

மேலும் இந்த கல்லூரியில் மட்டும் சென்ற வருடத்தை தொடர்ந்து இந்த வருடம் இரண்டாவது தற்கொலை சம்பவம் என்பதால் இந்த கல்லூரி விவகாரத்தில் மாவட்ட நிர்வாகம் தலையிட வேண்டுமென்று சமூக நல ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அம்பேத்கர் வாழ்க என கோஷமிட்ட அதிஷி சஸ்பெண்ட்.. டெல்லியில் பரபரப்பு..!

என்னை தாண்டி இந்திய திணிச்சிடுவீங்களா? திடீரென இந்தி எதிர்ப்பில் குதித்த சீமான்!

ரயில்வே துறை எச்சரிக்கையை மீறி இந்தி எழுத்துக்கள் அழிப்பு.. நெல்லையில் பரபரப்பு..!

சென்னை - பெங்களூரு பயண நேரம் 30 நிமிடங்கள் தான்.. வருகிறது ஹைப்பர்லூப் ரயில்..!

மூடப்படுகிறதா பூந்தமல்லி பேருந்து நிலையம்.. புதிய பேருந்து நிலையம் எங்கே?

அடுத்த கட்டுரையில்
Show comments