Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை தீர்த்துக் கட்டிய மனைவி: மேடவாக்கத்தில் பரபரப்பு

Webdunia
வியாழன், 5 ஜனவரி 2017 (11:38 IST)
சென்னை மேடவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் அறிவழகன்(வயது 35). எலக்ரிக்கல் என்ஜினியரான இவர் வீட்டில் நேற்று முந்தினம் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் மனைவிக்கும் கத்தி குத்து விழுந்து படுகாயம் அடைந்தார்.


 

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அறிவழகன் மனைவி சுரேகாவிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது, புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது எங்கள் வீட்டின் அருகே சிலர் மது அருந்தினர். அதனை எனது கணவர் தட்டி கேட்டார். உடனே அங்கிருந்து கிளம்பிய அதே நபர்கள் நேற்று முந்தினமும் மது அருந்தினர். இதனால் கோபம் அடைந்த எனது கணவர் அவர்களை சத்தம் போட்டார். அப்போது மறைத்து வைத்திருந்த கத்தியால் எனது கணவரை குத்திவிட்டு அந்த நபர்கள் அங்கிருந்து கிளம்பினர் என்று கூறினார்.

இந்த புகாரை அடுத்து போலீஸார் விசாரணை நடத்தினர். அறிவழகன் மனைவி கூறியதுபோல் அப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை என்பது போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து போலீசாரின் சந்தேகம் அறிவழகன் மனைவி மீது திரும்பியது. உடனடியாக சுரேகாவிடம் கடும் விசாரணை நடத்தினர். அப்போது சுரேகாவிற்கும் அதே பகுதியை சேர்ந்த சூர்யா என்ற வாலிபருக்கும் கள்ளக்காதல் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து சூர்யாவை கைது செய்த போலீசார் இருவரிடமும் விசாரணை நடத்தினர். விசாரணையில், அறிவழகனுக்கும் சுரேகாவுக்கும் திருமணம் நடந்து 4 ஆண்டுகள் ஆகின்றன.இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உண்டு. இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த சூர்யாவுக்கும் சுரேகாவுக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது.

இதனை கேள்விபட்ட அறிவழகன் தனது மனைவியை கண்டித்துள்ளார். ஆனால் அதனை கண்டுகொள்ளாத சுரேகா சுர்யாவுடன் சேர்ந்து கணவனை கொலை செய்ய திட்டமிட்டார். அதன்படி நேற்று முந்தினம் இரவு அறிவழகன் வீட்டிற்கு சென்றார் சூர்யா. அப்போது உறங்கிகொண்டிருந்த அறிவழகனை சூர்யாவும் சுரேகாவும் சேர்ந்து அவரை தலையணையால அமுக்கியும் ,கத்தியால் குத்தியும் கொலை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.
 

ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை..! கடன் பிரச்சினையால் விபரீத முடிவு.!!

கனமழையால் தமிழகத்தில் 4,385 ஹெக்டேர் பயிர்கள் சேதம்.!

குற்றால அருவிகளில் குளிக்கலாம்.. மாவட்ட ஆட்சி தலைவர் அறிவிப்பால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி..!

எடப்பாடி பழனிசாமி கை நீட்டுபவர் தான் பிரதமராக வருவார்: ஆர்.பி.உதயகுமார் பேட்டி

திரௌபதி அம்மன் கோவிலில் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments