Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ப.சிதம்பரம் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை

Webdunia
சனி, 13 ஜனவரி 2018 (10:39 IST)
முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கடந்த சில மாதங்களாகவே மத்திய அரசை கடுமையாக விமர்சித்து வருகிறார். குறிப்பாக பணமதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் ஜிஎஸ்டி ஆகிய இரண்டையும் அவர் கடுமையாக விமர்சித்து பாஜகவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தினார்.
இந்த நிலையில் ப.சிதம்பரம் அவர்களின் மகன் கார்த்திக் சிதம்பரம் மீது சிபிஐ தொடர்ந்த ஒரு வழக்கில் அவர் ஆஜராகாததால் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. இதனால் அவர் வெளிநாடுகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
 
இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு ப. சிதம்பரத்தின் உறவினர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை சார்பில் சோதனை நடத்தப்பட்டது  இதனைத்தொடர்ந்து சென்னை நுங்கம்பாக்கத்தில் ப.சிதம்பரத்தின் வீட்டில் இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். சி.பி.ஐ., அதிகாரிகளும் அங்கு உள்ளனர். காலை 8 மணி முதல் நடந்து வரும் இந்த சோதனையில் 8 அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். 

இந்த சோதனையானது பிற்பகல் வரை தொடர வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. ஐ.என்.எக்ஸ் மீடியா விவகாரம் தொடர்பாக சோதனை நடந்து வருவதாக முதல்கட்ட தகவல் தெரிவிக்கின்றன. சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமாக டில்லியில் உள்ள வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாடு முழுவதும் யுபிஐ சேவை திடீர் முடக்கம்! அதிர்ச்சியில் டிஜிட்டல் பயனாளிகள்..!

1 மது பாட்டில் வாங்கினால், 1 மதுபாட்டில் இலவசமா? அரசின் சலுகை அறிவிப்புக்கு முன்னாள் முதல்வர் கண்டனம்..!

ஆன்லைன் விளையாட்டுக்கு தடை: மாநில அரசுகளே சட்டம் இயற்றலாம்: மத்திய அரசு

மீண்டும் தமிழக மீனவர்கள் 11 பேர் கைது. இலங்கை கடற்படையின் தொடர் அட்டகாசம்..!

1000 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும் பணி தொடக்கம்: ஆசிரியர் தேர்வு வாரியம்.

அடுத்த கட்டுரையில்
Show comments