சென்னை எஸ்டிபிஐ அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை.. தொண்டர்கள் திரண்டதால் பரபரப்பு..!

Mahendran
வியாழன், 6 மார்ச் 2025 (13:22 IST)
சென்னையில் உள்ள எஸ்டிபிஐ அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீரென சோதனை மேற்கொள்வது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலைமையில், எஸ்டிபிஐ கட்சித் தொண்டர்கள் அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு எதிராக கோஷமிட்டு வருவதால் கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
ஏற்கனவே, அமைச்சர் செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்களின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிற நிலையில், சென்னை மண்ணடி அருகே அமைந்துள்ள எஸ்டிபிஐ கட்சி அலுவலகத்திலும் இன்று திடீரென நான்கு வாகனங்களில் வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
 
மேலும், அவர்களுக்கு பாதுகாப்பாக துப்பாக்கி ஏந்திய மத்திய ரிசர்வ் படை போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த தகவல் பரவியதும், அந்த பகுதியைச் சேர்ந்த எஸ்டிபிஐ கட்சித் தொண்டர்கள் ஏராளமாக கட்சி அலுவலகம் முன்பு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், சோதனை செய்த அதிகாரிகளை கண்டித்து அவர்கள் கோஷமிட்டனர். இதனால், அந்த பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோவையில் இளம்பெண் கடத்தப்படவே இல்லையா? மாநகர காவல் ஆணையர் விளக்கம்..!

தேர்தலை திருடி பிரதமர் ஆனவர் மோடி.. இதை Gen Z இளைஞர்களுக்கு புரிய வைப்போம்: ராகுல் காந்தி

டெல்லியில் 100-க்கும் மேற்பட்ட விமானங்கள் கிளம்ப முடியாமல் தவிப்பு.. என்ன காரணம்?

பள்ளிகள், பேருந்து நிலையங்கள், மருத்துவமனைகளில் உள்ள தெருநாய்களை அகற்றுங்கள்: கோர்ட் உத்தரவு..!

அனைத்து அவலங்களுக்கும் அடிப்படை காரணம் இதுதான்: தமிழக அரசை விமர்சித்த சு வெங்கடேசன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments