Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தாம்பரம் அருகே அடுத்தடுத்து மின்சார ரயில்கள் நிறுத்தம்: பயணிகள் அவதி

Webdunia
புதன், 23 நவம்பர் 2022 (15:28 IST)
தாம்பரம் அருகே சென்னை நோக்கி வர வேண்டிய ரயில்கள் அடுத்தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதால் பயணிகள் பெரும் அவதியில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன 
 
சென்னையின் முக்கிய போக்குவரத்துகளில் ஒன்றான மின்சார ரயில் மக்களுக்கு பெரும் உதவியாக இருக்கிறது என்றும் சரியான நேரத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு மற்றும் அலுவலத்திற்கு வருவதற்கு மின்சார ரயிலை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் திடீரென ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக தாம்பரத்தில் புறநகர் ரயில்சேவை ஒரு மணி நேரமாக பாதிப்படைந்து உள்ளதாக தெரிகிறது. 
 
உயர்மின் அழுத்தக் கம்பி உடன் இணையும் பகுதி பழுதானதால் தாம்பரம் சானிடோரியம் இடையே மின்சார ரயில் ஒரு மணி நேரமாக அடுத்தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாகவும் ரயில்கள் அடுத்தடுத்து செல்ல முடியாமல் இருப்பதால் பயணிகள் அவதியில் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளன
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments