Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுக கொடிக்கம்பம் அகற்றும்போது விபரீதம்: மின்சாரம் பாய்ந்து ஒருவர் பலி.. 4 பேர் படுகாயம்..!

Mahendran
திங்கள், 24 மார்ச் 2025 (10:50 IST)
ஊத்தங்கரை அருகே திமுக கொடிக்கம்பம் அகற்றும் பணியின் போது மின்சாரம் பாய்ந்து ஒருவர் உயிரிழந்தார். மேலும், 4 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.
 
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே மூன்றம்பட்டி ஊராட்சிக்குள்பட்ட கேத்துநாயக்கன்பட்டியில் இந்த துயரச் சம்பவம் நடந்துள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த ராமமூர்த்தி  என்பவர் திமுக கிளைச் செயலாளராக செயல்பட்டு வந்தார்.
 
திமுக தலைமையின் உத்தரவின்படி, பொதுமக்கள் பயன்படுத்தும் இடத்தில் இருந்த கொடிக்கம்பத்தை அகற்றும் பணியில் கட்சி நிர்வாகிகள் ஈடுபட்டிருந்தனர். அப்போது, எதிர்பாராத விதமாக கொடிக்கம்பம் அருகிலிருந்த மின்கம்பியில் மோதியது.
 
இதனால் ஏற்பட்ட மின்சாரம் பாய்ந்ததில், ராமமூர்த்தி உட்பட ஐந்து பேர் கடுமையாக காயமடைந்தனர். உடனடியாக அனைவரும் ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். ஆனால், மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது ராமமூர்த்தி உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.படுகாயமடைந்த 4 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 
விபத்து நடந்தது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் ராமமூர்த்தியின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் வைத்த சிங்காரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கண்மூடித்தனமாக தாக்கும் இஸ்ரேல்! சாலையெங்கும் பிணங்கள்! - 50 ஆயிரத்தை தாண்டிய பலி எண்ணிக்கை!

பிரதமர் பதவியேற்ற 10 நாட்களில் நாடாளுமன்றம் கலைப்பு.. கனடாவில் பெரும் பரபரப்பு..!

ஐபிஎல் போட்டியை பார்த்துவிட்டு திரும்பியபோது விபத்து: 2 கல்லூரி மாணவர்கள் பலி..!

காவலர் கொலை வழக்கு.. கொலையாளியை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த போலீஸ்..!

சீனியர் கல்லூரி மாணவரை அடித்து டார்ச்சர் செய்த முதலாம் ஆண்டு மாணவர்கள்.. 13 பேர் சஸ்பெண்ட்..

அடுத்த கட்டுரையில்
Show comments