Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓபிஎஸ்ஸுக்கு மின்கம்பம், தினகரனுக்கு தொப்பி சின்னம்!

ஓபிஎஸ்ஸுக்கு மின்கம்பம், தினகரனுக்கு தொப்பி சின்னம்!

Webdunia
வியாழன், 23 மார்ச் 2017 (12:01 IST)
அதிமுகவின் அதிகாரப்பூர்வ சின்னமான இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டதை அடுத்து ஓபிஎஸ் அணிக்கு இரட்டை மின்கம்பத்தையும், சசிகலா அணிக்கு ஆட்டோ சின்னத்தையும் ஒதுக்கியுள்ளது தேர்தல் ஆணையம்.


 
 
அதிமுக இரண்டு அணிகளாக பிளவுபட்டுள்ளதால், இரு அணிகளுக்கும் இரட்டை இலை சின்னம் கிடையாது என சின்னத்தை தற்காலிகமாக முடக்கியது தேர்தல் ஆணையம். இரண்டு அணிகளும் புதிய சின்னத்தை பெற இன்று தேர்தல் ஆணையத்தை அனுகியது.
 
இதில் இரு அணிகளும் மூன்று சின்னங்களை பரிந்துரை செய்யலாம். அதில் இரண்டு அணிகளும் இரண்டு சின்னங்களையே பரிந்துரை செய்தது. அதில் இரட்டை மின்கம்பம் சின்னத்தை இரு அணிகளும் கேட்டிருந்தது. இதனால் தேர்தல் ஆணையத்துல் கடுமையான வாதங்களை முன் வைத்தனர் இரு தரப்பினரும்.
 
இறுதியில் ஓபிஎஸ் தரப்பிற்கு இரட்டை மின்கம்பம் சின்னம் ஒதுக்கப்பட்டது. சசிகலா அணி இரட்டை மின்கம்பம் சின்னத்துடன், ஆட்டோ சின்னத்தையும், தொப்பி சின்னத்தையும் பரிந்துரை செய்தது. இதனையடுத்து அவர்களுக்கு ஆட்டோ சின்னத்தை ஒதுக்கியது தேர்தல் ஆணையம்.
 
ஆனால் சசிகலா அணி பலக்கட்ட ஆலோசனைக்கு பின்னர் ஆட்டோ சின்னம் வேண்டாம் என கூறி தொப்பி சின்னத்தை பெற்றுள்ளனர். ஓபிஎஸ் அணி அஇஅதிமுக புரட்சித்தலைவி அம்மா என்ற பெயரையும், சசிகலா அணி அஇஅதிமுக அம்மா என்ற பெயரிலும் களம் இறங்குகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

28 நாட்களில் 91 ஆயிரம் பேருக்கு கொரோனா! பெருந்தொற்றாக மாறுமா? - உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

விருந்தில் பணத்தை காற்றில் தூக்கியெறிந்த பெண்.. நீதிமன்றம் கொடுத்த அதிர்ச்சி தண்டனை..!

ஆர்டர் செய்ததோ வீட்டு உபயோக பொருட்கள்.. வந்ததோ பொருட்களின் ஸ்டிக்கர்கள்.. அதிர்ச்சி தகவல்..!

6 வயது மகளை கண்களுக்காக விற்பனை செய்த தாய்.. வழக்கை விசாரித்த நீதிபதி அதிர்ச்சி..!

உச்சத்திற்கு சென்றது ஜியோ.. 1.55 லட்சம் சந்தாதாரர்களை இழந்த பி.எஸ்.என்.எல்.. அதிர்ச்சி தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments