Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேர்தல் தோல்வி - ஒரு நாள் கழித்து கருத்து கூறிய எச்.ராஜா

Webdunia
புதன், 12 டிசம்பர் 2018 (13:29 IST)
நேற்று 5 மநில தேர்தல் முடிவுகள் வெளியாகி நாடெங்கும்  பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஏனென்றால் மோடி அலை  நாடு முழுதும் வீசும், நிச்சயமாய் பாஜக ஜெயிக்கும், என்றாலும் பாஜக தலைவர்கள் கட்டியம் கூறினர்.அதிலும் பாஜக தேசிய செயலரும், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனும் பரப்பின பில்டப்புகளுக்கு அளவே இல்லை.அகராதியாக வார்தைகள் நீண்டன.இந்நிலையில் நேற்று இது பற்றி எச். ராஜா  கருத்து எதுவும் தெரிவிக்காத நிலையில் திருமாவளவனைப் பற்றி சர்ச்சைக் கருத்துக்கூறிய பிறகு இன்று தன் டிவிட்டர் பக்கத்தில் தேர்தல் தோல்வி பற்றி பதிவிட்டிருக்கிறார்.
அதில் ’ஜனநாயகத்தில் வெற்றி தோல்விகள் சகஜம் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள் . இந்த தேர்தலில் கட்சிக்காக அர்பணிப்பு மனப்பான்மையுடன் பணியாற்றிய அனைத்து செயல் வீரர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் தெரிவித்துக்கொள்கிறேன்.வெற்றியில் அடக்கமும் தோல்வியில் எழுச்சியும் தேவை.’இவ்வாறு அவர் பதிவிட்டிருக்கிறார்.
ஒருவழியாக நேற்று 5 மாநில தேர்தல் முடிகள் முதல் வெளியாகிக் கொண்டிருந்த போது 10 மணிகெல்லாம் பாஜக சரிவைச் சந்திப்பது தெரிந்தது. பின் தோல்வி நிச்சயம் என்பதை அறிந்து தமிழிசை சவுந்தரராஜன் வெற்றிகரமான தோல்வி என்று கூறியிருந்த நிலையில் தற்போது எச்.ராஜாவும் தன் கருத்தை பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments