இன்று ஊரக உள்ளாட்சி மறைமுகத் தேர்தல்: வழிகாட்டுதல் வெளியீடு!

Webdunia
வெள்ளி, 22 அக்டோபர் 2021 (08:36 IST)
ஊரக உள்ளாட்சி மறைமுகத் தேர்தலுக்கான வழிகாட்டுதல்களை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

 
தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தல் நடைபெற்ற நிலையில் இரண்டு நாட்களாக நடந்த வாக்கு எண்ணும் பணிகள் முடிந்து இந்த தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் திமுக வெற்றி பெற்றது.
 
இந்த தேர்தலில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சி தலைவர், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு போட்டியின்றி மற்றும் போட்டி மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்கள் கடந்த பதவியேற்றுக்கொண்டனர்.  
 
இந்நிலையில் இன்று மாவட்ட ஊராட்சி தலைவர், துணைத் தலைவர், ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர், துணைத் தலைவர், கிராம ஊராட்சித் துணைத் தலைவர் தேர்தல் நடைபெறுகிறது. இதனிடையே இந்த மறைமுகத் தேர்தலுக்கான வழிகாட்டுதல்களை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
 
1. தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பில் உள்ள இடத்தில்தான் தேர்தலை நடத்த வேண்டும், வேறு இடத்தில் நடத்தினால் அது செல்லாது.
2. பெரும்பான்மைக்கும் குறைவான எண்ணிக்கையில் உறுப்பினர்கள் வந்திருப்பின் தேர்தல் நடத்தக்கூடாது. 
3. பெரும்பான்மை உறுப்பினர்களின் வருகைக்காக 30 நிமிடங்கள் வரை காத்திருக்க வேண்டும். 
4. 30 நிமிடங்களுக்கு பிறகும் போதிய எண்ணிக்கையில் உறுப்பினர்கள் வரவில்லையென்றால் கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டும்.
 5. ஒரு பதவிக்கு இருவர் போட்டியிட்டு சம வாக்குகளைப் பெற்றால் குலுக்கல் முறையில் தேர்வு செய்ய வேண்டும். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று முதல் ஸ்லீப்பர் வசதியுடன் வந்தே பாரத் ரயில்.. ஆனால் விமான கட்டணத்தில் பாதியா?

ஆண்களுக்கும் இலவச பேருந்து.. மகளிருக்கு மாதம் ரூ.2000.. எடப்பாடி பழனிசாமி அதிரடி அறிவிப்பு..!

என்.டி.ஏ கூட்டணியில் டிடிவி தினகரன்.. 10 தொகுதிகள், ஒரு ராஜ்யசபா தொகுதி?

டிரம்ப் வரிவிதிப்பால் பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்திய குஜராத் மாணவர்கள்.. அதிர்ச்சி தகவல்..!

க்ரீன்லாந்து விவகாரத்தில் ஒத்துழைக்காத நாடுகளுக்கு கூடுதல் வரி: டிரம்ப் அச்சுறுத்தல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments