வாக்குப் பதிவு சுமூகமாக நடைபெறுகிறது: குடும்பத்துடன் வாக்களித்த பின் சத்யபிரதா சாகு பேட்டி!

Webdunia
செவ்வாய், 6 ஏப்ரல் 2021 (09:13 IST)
வாக்குப் பதிவு சுமூகமாக நடைபெறுகிறது: குடும்பத்துடன் வாக்களித்த பின் சத்யபிரதா சாகு பேட்டி!
தமிழகத்தில் இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அவர்கள் தனது குடும்பத்துடன் வந்து வாக்களித்தார். சென்னை வளசரவாக்கத்தில் அவர் தனது வாக்கை பதிவு செய்தபின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
 
தமிழகம் முழுவதும் சுமூகமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருவதாகவும் ஓரிரு இடங்களில் தவிர மற்ற இடங்களில் இயந்திர கோளாறு குறித்த எந்த பிரச்சனையும் இல்லை என்றும் அவர் கூறினார் 
 
எந்திர கோளாறு பிரச்சனை உள்ள தொகுதியில் வாக்குப்பதிவு நேரம் நீடிக்கக் கூடாது என்றும் அவர் தெரிவித்தார். மேலும் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்
 
மேலும் வாக்குப்பதிவு சதவீதம் குறித்த தகவல்கள் ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை வெளியாகும் என்றும் முதல் தகவல் இன்னும் சில நிமிடங்களில் வெளியாகும் என்றும் அவர் கூறினார்
 
மேலும் அனைத்து வாக்காளர்களும் தங்களுடைய வாக்குப் பதிவு செய்ய வேண்டும் என்றும் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என்றும் தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரகாஷ் அவர்கள் வேண்டுகோள் விடுத்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பல போர்களை முடிவுக்கு கொண்டு வந்து ட்ரம்புக்கு நோபல் பரிசு இல்லையா? வெள்ளை மாளிகை கண்டனம்

விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட இளைஞர் மர்ம மரணம்.. பெண் காவல் ஆய்வாளர் இடமாற்றம்.!

நோபல் கிடைக்காவிட்டாலும் மகிழ்ச்சியில் ட்ரம்ப்! வெனிசுலாதான் காரணமா?

20 லட்சம் கடன் தருவதாக கூறி லட்சக்கணக்கில் ஏமாந்த நபர்.. மோசடியில் இருந்து தப்பிப்பது எப்படி?

குறைவது போல குறைந்து மீண்டும் உயர்ந்த தங்கம்! தற்போதைய விலை நிலவரம்!

அடுத்த கட்டுரையில்
Show comments