Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தமிழகத்தின் 39 தொகுதிகளின் வாக்குகள் எண்ணும் இடங்கள்: தேர்தல் ஆணையம்

தமிழகத்தின் 39 தொகுதிகளின் வாக்குகள் எண்ணும் இடங்கள்: தேர்தல் ஆணையம்
, வெள்ளி, 25 ஏப்ரல் 2014 (11:22 IST)
தமிழகத்தின் 39 மக்களவைத் தொகுதிகளின் வாக்குகள் எண்ணும் இடங்கள்களைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

நடந்துமுடிந்த, மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் 72.8 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்குப் பதிவு விறுவிறுப்பாகவும் அமைதியாகவும் நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தின் 39 மக்களவைத் தொகுதிகளிலும் வாக்குப்பதிவு முடிந்தவுடன் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சீல் செய்யப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டன. மே 16ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன.
 
வாக்கு எண்ணும் இடங்களின் விவரங்கள்:
 
1. திருவள்ளூர் (தனி) - ஸ்ரீராம் வித்யாமந்திரி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி.
2. வடசென்னை - ராணிமேரி கல்லூரி.
3. தென்சென்னை - அண்ணா பல்கலைக்கழகம்.
4. மத்தியசென்னை - லயோலா கல்லூரி.
5. ஸ்ரீபெரும்புதூர் - ஜே.ஜே.அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி (இங்கு ஆலந்தூர் தொகுதி இடைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையும் நடைபெறுகிறது).
6. காஞ்சீபுரம் (தனி) - அரசு உயர்நிலைப்பள்ளி, திருப்புக்குழி.
7. அரக்கோணம் - ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரி மற்றும் ராணிப்பேட்டை பாலிடெக்னிக் கல்லூரி.
8. வேலூர் - ஈ.வெ.ரா.தந்தை பெரியார் அரசு தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் மற்றும் தந்தை பெரியார் பாலிடெக்னிக் கல்லூரி.
9. கிருஷ்ணகிரி - அரசு பாலிடெக்னிக் கட்டிடம், சென்னை சாலை.
10. தருமபுரி - தருமபுரி அரசு கலைக் கல்லூரி.
11. திருவண்ணாமலை - ஒழுங்குமுறை விற்பனைக்கூடம்.
12. ஆரணி - சண்முகா தொழிற்சாலை அரசு மேல் நிலைப்பள்ளி, செங்கம் சாலை.
13. விழுப்புரம் (தனி) - அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி.
14. கள்ளக்குறிச்சி - ஏ.கே.டி.பொறியியல் கல்லூரி.
15. சேலம் - அரசு பொறியியல் கல்லூரி.
16. நாமக்கல் - விவேகானந்தா பெண்கள் பொறியியல் கல்லூரி.
17.ஈரோடு - சாலை மற்றும் போக்குவரத்து தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் (ஐ.ஆர்.டி.டி.).
18. திருப்பூர் - எல்.ஆர்.ஜி. அரசு பெண்கள் கலைக் கல்லூரி.
19. நீலகிரி (தனி) - அரசு பாலிடெக்னிக் கல்லூரி, உதகை.
20. கோவை - அரசு தொழில்நுட்ப கல்வி நிறுவனம் (ஜி.சி.டி.).
21. பொள்ளாச்சி - டாக்டர் மகாலிங்கம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி.
22. திண்டுக்கல - அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி.
23. கரூர் - எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரி.
24. திருச்சி - சாரநாதன் பொறியியல் கல்லூரி.
25. பெரம்பலூர் - தனலட்சுமி ஸ்ரீனிவாசன் நர்சிங் கல்லூரி மற்றும் பாலி டெக்னிக் கல்லூரி.
26. கடலூர் - பெரியார் அரசு கலைக் கல்லூரி.
27. சிதம்பரம் (தனி) - மீனாட்சி ராமசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி.
28. மயிலாடுதுறை - ஏ.வி.சி.பாலிடெக்னிக் கல்லூரி.
29. நாகப்பட்டினம் (தனி) - திரு.வி.க.அரசு கல்லூரி.
30. தஞ்சாவூர் - குந்தவை நாச்சியார் அரசு பெண்கள் கலைக் கல்லூரி.
31. சிவகங்கை - அழகப்பசெட்டியார் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, பாலிடெக்னிக்.
32. மதுரை - மதுரை மருத்துவக் கல்லூரி.
33. தேனி - தேனி கம்மவார்சங்க பாலிடெக்னிக் மற்றும் பொறியியல் கல்லூரி.
34. விருதுநகர் - எஸ்.வெள்ளைச்சாமிநாடார் பாலிடெக்னிக் கல்லூரி வி.எச்.என்.செந்தில்குமார் நாடார் கல்லூரி.
35. ராமநாதபுரம் - அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி.
36. தூத்துக்குடி - அரசு பாலிடெக்னிக் கல்லூரி.
37. தென்காசி (தனி) - ஸ்ரீபராசக்தி பெண்கள் கல்லூரி.
38. திருநெல்வேலி - அரசு பொறியியல் கல்லூரி.
39. கன்னியாகுமரி - அரசு பாலிடெக்னிக் கல்லூரி.
 
இவ்வாறு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
 

Share this Story:

Follow Webdunia tamil