நாம் தமிழர் கட்சிக்கு புதிய சின்னம் ஒதுக்கீடு! இது போதுமே சிறப்பா செய்யலாம்! – நா.த.கவினர் நிம்மதி!

Prasanth Karthick
வெள்ளி, 22 மார்ச் 2024 (12:44 IST)
நாம் தமிழர் கட்சியின் விவசாயி சின்னம் வேறு கட்சிக்கு ஒதுக்கப்பட்ட நிலையில் தற்போது நாம் தமிழர் கட்சிக்கு புதிய சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.



மாநில கட்சியான சீமானின் நாம் தமிழர் கட்சி கடந்த பல தேர்தல்களிலும் விவசாயி சின்னத்தில் போட்டியிட்டு கணிசமான வாக்கு சதவீதத்தை பெற்றிருந்த நிலையில், இந்த மக்களவை தேர்தலில் விவசாயி சின்னம் வேறு கட்சிக்கு ஒதுக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து இது தொடர்பாக நாம் தமிழர் கட்சி நீதிமன்றம் வரை சென்று முறையிட்டும் விவசாயி சின்னம் கிடைக்கவில்லை.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு வேட்பாளர் தேர்வும் நடந்து வரும்நிலையில் நாம் தமிழர் கட்சிக்கு சின்னம் ஒதுக்கப்படாமலே இருந்து வந்தது பரபரப்பை ஏற்படுத்தி வந்தது. இந்நிலையில் தற்போது நாம் தமிழர் கட்சிக்கு ‘மைக்’ சின்னத்தை ஒதுக்கியுள்ளது தேர்தல் ஆணையம்.

மக்களிடையே எடுத்து செல்லவும், எளிதாக மக்கள் மனதில் பதிய வைக்ககூடிய சின்னமாகவும் இந்த ‘மைக்’ சின்னம் உள்ளது. இதனால் சின்னம் கிடைத்துவிட்ட மகிழ்ச்சியில் மேலும் தீவிரமாக தேர்தல் பணிகளில் களமிறங்கியுள்ளனர் நாம் தமிழர் தொண்டர்கள்.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிகார் தேர்தல் தோல்வி எதிரொலி: இண்டி கூட்டணி உடைகிறதா?

செம்பரம்பாக்கம் ஏரியில் உபரிநீர் திறப்பு அதிகரிப்பு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை..!

பொங்கல் பண்டிக்கைக்காக டிசம்பர் 15 முதலே சிறப்பு ரயில்கள்: தெற்கு ரயில்வே

வாரத்தின் முதல் நாளே ஏற்றத்தில் பங்குச்சந்தை.. முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..!

சென்னையில் தங்கம் விலை இன்று ஏற்றமா? சரிவா? இன்றைய ஒரு சவரன் எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்
Show comments