Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

திருமண பத்திரிக்கை போன்று தேர்தல் விழிப்புணர்வு பலகை

திருமண பத்திரிக்கை போன்று தேர்தல் விழிப்புணர்வு பலகை
, திங்கள், 11 ஏப்ரல் 2016 (17:27 IST)
வாக்களர்களுக்காக, திருமண அழைப்பை போன்று பொதுமக்கள் பார்வைக்கு பிளக்ஸ் போர்டு வைத்து நூதன பிரச்சாரத்தில் ஈடுபட்டு கரூர் தேர்தல் துறை, அந்த ஊர் மக்களை கவர்ந்துள்ளனர்.


 

 
வரும் மே மாதம் 16 ம் தேதி தேர்தல் நடைபெறுவதையடுத்து கரூர் மாவட்டத்தில், ஆங்காங்கே வித்யாசமான முறையில் வாக்காளர்களை கவர்வதற்காக பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்களை தேர்தல் துறையினர் செய்து வருகின்றனர். 
 
இந்நிலையில் கரூர் சட்டமன்ற தொகுதியிலும், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதியிலும் வாக்களிக்கும் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நூதனமான பிளக்ஸ் போர்டுகளை வைத்த தேர்தல் துறையினர், இந்துக்களின் பாரம்பரிய முறைப்படி பத்திரிக்கைகள் வைத்து உறவினர்களை கூப்பிடுவது போல, ஆங்காங்கே பத்திரிக்கைகள் போல டிசைன் செய்து கண்ணியத்துடன் வாக்களிக்க அழைப்பிதழ் என்ற வாசகத்தில் பலகைகளை வைத்துள்ளனர்.

webdunia

 

 
அதில், நிகழும் வைகாசி மாதம் 3ம் தேதி 16-05-16 திங்கள்கிழமையன்று அன்று காலை 7 மணிக்கு மேல் 6 மணிக்குள் சுபவேளையில் இந்திய தேர்தல் ஆணையம் நடத்தும் சுபவேளை வைபோகம் என்ற வாசகங்கள் அடங்கிய போர்டுகளை ஆங்காங்கே பொதுமக்களுக்கு அழைப்பிதழ்களாக கரூர் பேருந்து நிலையம், தாந்தோன்றிமலை, லைட் ஹவுஸ் கார்னர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டிருப்பது வாக்காளர்களை மிகவும் கவர்ந்துள்ளது.


Share this Story:

Follow Webdunia tamil