Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யாருக்கு ஓட்டு போட வேண்டும்? நடிகர் விஜய்சேதுபதியின் வைரல் வீடியோ..!

Mahendran
புதன், 3 ஏப்ரல் 2024 (13:12 IST)
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் இந்த தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக விஜய் சேதுபதி வெளியிட்ட ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 
 
இந்த வீடியோவில் அவர் ஒவ்வொரு தேர்தல் வரும் போது நம்முடைய ஒரு ஓட்டு என்ன பாதிப்பை ஏற்படுத்தப் போகிறது என்று பலர் மெத்தனமாக இருந்து விடுகிறார்கள் என்றும் அதை எல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு நமக்காக இல்லை என்றாலும் நம்முடைய எதிர்கால தலைமுறையினர்களுக்காக ஓட்டு போட வேண்டும் என்றும் தெரிவித்தார் 
 
ஓட்டு போட காசு வாங்குவது எவ்வளவு பெரிய துரோகமோ, அதைவிட பச்சை துரோகம் ஓட்டு போடாமல் இருப்பது என்றும் நமக்கு யார் நன்மை செய்வார்கள், நம் நாட்டில் உள்ளவர்களுக்கு யார் நல்லது செய்வார்கள் என்பதை சிந்தித்து ஓட்டு போட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார் 
 
இதுவரை அரசியல் பேசவில்லை என்றாலும் பரவாயில்லை இன்று முதல் தேர்தல் நடைபெறும் நாள் வரை அரசியல் பேசுங்கள் என்றும் அரசியல் குறித்த விவாதம் செய்து அலசி ஆராய்ந்து உங்களுக்கு யார் நல்லவர் என்று தோன்றுகிறதோ அவர்களுக்கு ஓட்டு போடுங்கள் என்றும் ஆனால் ஓட்டு போடாமல் மட்டும் இருந்து விடாதீர்கள் என்றும் விஜய் சேதுபதி அந்த வீடியோவில் கூறியுள்ளார். 
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு முக்கிய பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

தென்மேற்குப் பருவமழை தொடக்கம்: இயல்பை விட அதிக மழை பெய்ய வாய்ப்பு

அதிமுகவுடன் கூட்டணியா? கோவை பொதுக்கூட்டம்! - சீமான் வெளியிடப்போகும் முக்கிய அறிவிப்பு!

பிளஸ்-1 பொதுத்தேர்வில் 92.09 சதவீதம் பேர் தேர்ச்சி: மாணவியர்கள் தான் அதிகம்..!

10ஆம் வகுப்பு தேர்ச்சி விகிதம்.. பின்தங்கிய சென்னை மாவட்டம்.. 38ல் 34வது இடம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments