Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மொழி திணிப்பிற்கு இடமில்லை: தமிழில் டிவிட் போட்ட ரமேஷ் பொக்ரியால்!!

Webdunia
திங்கள், 3 ஆகஸ்ட் 2020 (10:46 IST)
மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் மத்திய அரசு எந்த மொழியையும் திணிக்காது என தமிழில் ட்வீட் செய்துள்ளார்.
 
கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தேசிய அளவில் கல்விக்கொள்கையில் மாற்றங்கள் செய்யப்படாமல் இருந்த நிலையில் மத்திய அரசு மாணவர்களின் திறனை மேம்படுத்தும் வகையில் புதிய கல்வி கொள்கை முறை ஏற்படுத்தப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளது.   
 
தற்போது உள்ள நடைமுறைகளிலிருந்து சிலவற்றை நீக்கியும், புதிய முறைகளை இணைத்தும் புதிய கல்வி கொள்கை ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்த கல்வி கொள்கைக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. 
 
அதாவது தமிழகத்தில் இருமொழி கொள்கை பின்பற்றப்பட்டு வரும் நிலையில் மத்திய அரசு கொண்டு வரவுள்ள புதிய கல்விக் கொள்கையின் மூலம் மும்மொழி கொள்கை என மறைமுகமாக மொழித் திணிப்பு நடத்தப்படும் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
 
இந்நிலையில் பிரதமர் மோடி புதிய கல்வி கொள்கை குறித்து விளக்கம் அளித்தார். இதன் தமிழ் ஆக்கத்தை பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இந்த பதிவை குறிப்பிட்டு மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தமிழில் ட்வீட் செய்துள்ளார்.
 
அவர் பதிவிட்டுள்ளதாவது, பொன் ராதாகிருஷ்ணன் ஜி, தமிழ்நாட்டில்  தேசிய கல்விக் கொள்கை (NEP) நடைமுறைப்படுத்துவதற்கான உங்கள் வழிகாட்டலை எதிர்பார்க்கிறோம். மத்திய அரசு, எந்தவொரு மாநிலத்தின் மீதும் எந்த மொழியையும் திணிக்காது என்பதை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன் என குறிப்பிட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments