Webdunia - Bharat's app for daily news and videos

Install App

10ஆம் வகுப்பு தேர்வு: காலாண்டு, அரையாண்டு தேர்வு எழுதாதவர்களின் நிலை என்ன?

Webdunia
ஞாயிறு, 5 ஜூலை 2020 (17:53 IST)
கொரோனா வைரஸ் காரணமாக பத்தாம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டு மாணவர்கள் அனைவரும் பாஸ் என்ற அறிவிப்பை தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சமீபத்தில் வெளியிட்டது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையிலும், வருகை பதிவேடு அடிப்படையில் மதிப்பெண் வழங்க உத்தரவிடப்பட்டது இதனை அடுத்து பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கும் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது
 
இந்த நிலையில் திடீரென பத்தாம் வகுப்பு காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களின் நிலை என்ன என்பது குறித்த கேள்வி எழுந்தது. அது குறித்து சமீபத்தில் வெளியிட்ட சுற்றறிக்கையில் காலாண்டு அரையாண்டு தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்றாலும் அந்த மாணவர்களுக்கு தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டது 
 
இந்த நிலையில் தற்போது புதிதாக ஒரு குழப்பம் எழுந்துள்ளது. காலாண்டு மற்றும் அரையாண்டுதேர்வுகளை முழுமை எழுதாத மாணவர்களின் நிலை குறித்த சுற்றறிக்கை ஒன்றை சமீபத்தில் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அறிவித்துள்ளார். இந்த சுற்றறிக்கையில் காலாண்டு மற்றும் அரையாண்டுதேர்வு முழுமையாக எழுத மாணவர்களுக்கு ஆப்சென்ட் போட வேண்டும் என தெரிவித்துள்ளார். ஆப்சென்ட் போட்டால் அந்த மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக எப்படி அறிவிக்கப்படுவார்கள் என்ற குழப்பம் தற்போது இருந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவில் வெளியானது Realme 14x 5G! சிறப்பம்சங்கள், விலை நிலவரம்!

காங்கிரஸ் கட்சி தான் அம்பேத்கருக்கு எதிரானது: சர்ச்சைக்கு விளக்கம் அளித்த பிரதமர் மோடி

’விடுதலை 2’ படத்தில் இடம்பெற்ற அரசியல் வசனத்தை நீக்குவதா? வன்னி அரசு கண்டனம்..

பாசிஸ்ட்டுகளுக்கு, அம்பேத்கரின் பெயரைக் கேட்டாலே எரிச்சல் வருகிறது: துணை முதல்வர் உதயநிதி

எதிர்க்கட்சிகள் தொடர் அமளி எதிரொலி: இரு அவைகளும் ஒத்திவைப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments