Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமி ஆலோசனை - தமிழகத்தில் அடுத்து என்ன?

Webdunia
திங்கள், 12 ஏப்ரல் 2021 (12:31 IST)
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். 

 
தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பின் இரண்டாம் அலை வேகமெடுத்துள்ள நிலையில் தமிழக அரசு முக்கிய கட்டுப்பாடுகளை சமீபத்தில் அறிவித்தது. எனினும் பல இடங்களில் மக்கள் கொரோனா விழிப்புணர்வின்றி பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
 
தற்போது தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் தற்காலிக பொறுப்பில் இருக்கும் அரசு ஆட்சியே நடைபெறும் என்ற நிலையில் கொரோனா காரணமாக முதல்வர் முக்கிய முடிவுகள் எடுக்க தேர்தல் ஆணையம் தளர்வுகள் வழங்கியுள்ளது. 
 
அதன்படி, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். இதில் மூத்த அமைச்சர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

பாகிஸ்தானை புகழ்பவர்களுக்கு இந்தியாவில் இடமில்லை: யோகி ஆதித்யநாத்

இந்திய இளைஞர்களை கோயிலுக்கு வரவழைக்க வேண்டும்: இஸ்ரோ தலைவர் சோம்நாத் வலியுறுத்தல்

மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை.. சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு தடையா?

நீலகிரி மாவட்டத்தில் வெளுத்து வாங்கும் கனமழை.. ஊட்டி மலை ரயில் ரத்து..! எத்தனை நாட்களுக்கு?

இன்று முதல் வரும் 21ம் தேதி அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments