Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிஎன்பிஎஸ்சி காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 10,000 தான். எப்படி 40,000 நிரப்ப முடியும்? ஈபிஎஸ் கேள்வி

Mahendran
வெள்ளி, 14 மார்ச் 2025 (14:31 IST)
தமிழக சட்டசபையில் 2025-26 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்தார். இதனையடுத்து அ.தி.மு.க. பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து, பட்ஜெட் குறித்த தமது கருத்துக்களை வெளிப்படுத்தினார்.
 
அவர் கூறியதாவது: “அ.தி.மு.க. ஆட்சியில் 25 லட்சம் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் தற்போதைய தி.மு.க. அரசு, மக்கள் பிரச்சனைகளை தீர்க்காமல், விளம்பர நடவடிக்கைகளில் மட்டுமே கவனம் செலுத்துகிறது. முதல்வரும் துணை முதல்வரும் தங்களின் பிரசாரத்திற்கே முக்கியத்துவம் அளிக்கின்றனர். 
 
புதிய பேருந்துகள் வாங்க ரூ.3000 கோடி ஒதுக்கீடு என அறிவித்துள்ளதோடு, கடந்த நான்கு ஆண்டுகளில் 95% அறிவிப்புகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தவறான தகவலை பரப்புகின்றனர். 
 
மேலும், “அ.தி.மு.க. ஆட்சியில் உருவாக்கப்பட்ட பெண்கள் விடுதி திட்டத்தைதான் தி.மு.க. அரசு தற்போது செயல்படுத்துகிறது. நீட் தேர்வை ரத்து செய்ய உடனடி நடவடிக்கை எடுப்பதாக கூறிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இதுவரை அதற்கான முழு விவரங்களை வெளிப்படுத்தவில்லை. 
 
நிதி மேலாண்மை குழு அளித்த அறிக்கையை அரசு செயல்படுத்தியதா என்பது பற்றிய வெள்ளை அறிக்கையும் வழங்கப்படவில்லை. காலை உணவுத் திட்டம் புதியதல்ல, அதை முதலில் அறிமுகப்படுத்தியது அ.தி.மு.க. ஆட்சிதான்.
 
மேலும், 3.5 லட்சம் காலிப்பணியிடங்களை நிரப்புவதாக கூறிய தி.மு.க. அரசு, கடந்த நான்கு ஆண்டுகளில் வெறும் 57,000 பணியிடங்களையே நிரப்பியுள்ளது. ஒரே ஆண்டில் எப்படி 40,000 பணியிடங்களை நிரப்ப முடியும்?” என்று அவர் கேள்வி எழுப்பினார். டிஎன்பிஎஸ்சி-யில் உள்ள காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 10,000 தான். எப்படி 40,000 பணியிடங்களை நிரப்ப முடியும்? இவ்வாறு அவர் கூறினார்.",
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜவாஹிருல்லாவிற்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை: சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு..!

தி.மு.க. அரசு கடன் வாங்குவதில் சளைத்தது அல்ல: பட்ஜெட் குறித்து ஈபிஎஸ் விமர்சனம்..!

இலவசங்கள் எப்போதும் வறுமையை நீக்காது: இன்போசிஸ் நாராயண மூர்த்தி

தமிழக பட்ஜெட் 2025: எந்தெந்த துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு? முழு விவரம்!

தமிழக பட்ஜெட் 2025: வஞ்சித்த ஒன்றிய அரசு?? தமிழக அரசின் வருவாய், செலவின மதிப்பு எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்
Show comments