Webdunia - Bharat's app for daily news and videos

Install App

1000 கி.மீ. க்கு அப்பால் தேர்வு மையம் வைப்பதா? எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!

Siva
ஞாயிறு, 16 மார்ச் 2025 (15:45 IST)
தெற்கு ரயில்வேயில் உதவி லோகோபைலட் பணியிடங்களுக்கான 2ம் கட்டத் தேர்வை 1000 கி.மீ. க்கு அப்பால் வைப்பதா என அதிமுக பொதுச்செயலாளர்  எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது: 
 
தெற்கு ரயில்வேயில் உதவி லோகோபைலட் பணியிடங்களுக்கான 2ம் கட்டத் தேர்வு வரும் மார்ச் 19 அன்று நடைபெறவுள்ள நிலையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 90% தேர்வர்களுக்கு தெலங்கானா மாநிலத்தில் மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கிறது.
 
1000 கி.மீ. க்கு அப்பால் சென்று தேர்வு எழுதுவது தேர்வர்களுக்கு மிகுந்த சிரமத்தை அளிக்கும். 
 
மேலும், இதுபோன்ற குளறுபடிகள் ரயில்வே உள்ளிட்ட மத்திய அரசுப்பணிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞர்கள் அதிக அளவில் சேரவேண்டும் என்ற உந்துதலைக் குறைத்துவிடும் என்பதையும் மத்திய அரசு உணரவேண்டும்.
 
எனவே, தேர்வர்களின் கோரிக்கையினைக் கருத்திற் கொண்டு, தமிழ்நாட்டுத் தேர்வர்களுக்கான மையங்களை தமிழ்நாட்டிலேயே ஒதுக்கீடு செய்யுமாறு மத்திய அரசையும், தெற்கு ரயில்வே நிர்வாகத்தையும் வலியுறுத்துகிறேன்.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6,000 கோடி ரூபாய், துபாய் முதலீடு என்ன ஆனது? முதல்வருக்கு அண்ணாமலை கேள்வி..!

உத்தரவிட்ட பின்னரும் பரவும் பெண் வழக்கறிஞரின் அந்தரங்க வீடியோ.. உயர்நீதிமன்றம் கேள்வி..!

சென்னை விமான நிலையத்தில் மீண்டும் விபத்து.. கண்ணாடி கதவுகள் உடைந்ததால் பரபரப்பு..!

ஒரே நாளில் உச்சத்திற்கு சென்ற தங்கம் விலை.. ஒரு சவரன் ரூ.76,000ஐ நெருங்கியது..!

வெளிநாட்டு மாணவர்களால் அமெரிக்கா நாசமாகிவிட்டது! இந்தியாவை மறைமுகமாக தாக்கும் அமெரிக்கா?

அடுத்த கட்டுரையில்
Show comments