தமிழ்நாட்டின் முதல்வர் மு.க.ஸ்டாலின்! – எடப்பாடி பழனிசாமி வாழ்த்து!

Webdunia
திங்கள், 3 மே 2021 (10:56 IST)
தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மையில் வெற்றி பெற்ற நிலையில் எடப்பாடி பழனிசாமி தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் அதிக தொகுதிகளில் வென்று திமுக தனிப்பெரும்பான்மை வெற்றி பெற்றுள்ளது. நடப்பு ஆளும் கட்சியாக இருந்த அதிமுக கூட்டணி 74 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்று தோல்வியை தழுவியுள்ளது.

இந்நிலையில் பல்வேறு தலைவர்களும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வரும் நிலையில் பதவியேற்பு குறித்து நாளை திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற உள்ளது.

இந்நிலையில் ட்விட்டர் வாயிலாக மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி “தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்கவுள்ள திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு என்னுடைய நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று மாலை 22 மாவட்டங்களில் மழை கொட்டும்: வானிலை ஆய்வு மையம் தகவல்...!

25 குழந்தைகள் மரணத்திற்கு தமிழக அரசின் அலட்சியமே காரணம்: இருமல் மருந்து விவகாரம் குறித்து ஈபிஎஸ்..!

கோல்ட்ரிப் மருந்து விவகாரம்! மத்திய அரசீன் அலட்சியமே காரணம்! - மா.சுப்பிரமணியன் குற்றச்சாட்டு!

ஆரம்பமே 42% கூடுதல் மழை.. இன்னும் அதிகரிக்கும் மழை! - வானிலை ஆய்வு மையம்!

முதல்முறையாக நேருக்கு நேர் சந்திக்கும் ஜெலன்ஸ்கி - புதின்? - ட்ரம்பின் அடுத்த போர்நிறுத்த வியூகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments