Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இ-பாஸ் ரத்து குறித்து முக்கிய முடிவுகளை வெளியிடும் எடப்பாடியார்!

Webdunia
செவ்வாய், 25 ஆகஸ்ட் 2020 (10:20 IST)
இ-பாஸ் குறித்து முதல்வர் சில முக்கிய முடிவுகளை அறிவிப்பார் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். 
 
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணங்களால் மாவட்டங்களுக்கு இடையே பயணிக்கவும், வேறு மாநிலங்களில் இருந்து தமிழகம் வரவும் இ-பாஸ் நடைமுறை அமலுக்கு வந்தது. இந்நிலையில் இபாஸ் கிடைப்பதில் சிக்கல்கள் ஏற்பட்டதால் மக்கள் அனைவருக்கும் இ-பாஸ் கிடைக்கும் விதமாக தளர்வுகள் வழங்கப்பட்டன. 
 
இந்நிலையில் மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் மக்கள் மாநிலங்களுக்கு இடையிலோ அல்லது மாவட்டங்களுக்கு இடையிலோ பயணிக்க மாநில அரசுகள் எந்த தடையும் விதிக்கக்கூடாது என்று கூறியுள்ளது. இந்த அறிவிப்பை தொடர்ந்து தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறை ரத்து செய்யப்படுமா என கேள்வி எழுந்துள்ளது.  
 
இது குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் இ-பாஸ் முறையை ரத்து செய்வது சவாலானது என தெரிவித்திருந்தார். இதன் பின்னர் இ-பாஸ் தொடர்பாக தலைமைச் செயலாளர் அனைத்து மாவட்ட ஆணையர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். விடைவில் இது குறித்து முதல்வர் சில முக்கிய முடிவுகளை அறிவிப்பார் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் இல்லாமல் பேச்சுவார்த்தை நடத்துவதா? டிரம்ப் - புதின் பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் அதிபர் எதிர்ப்பு..!

காதில் ஊற்றப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்து.. யூடியூப் வீடியோ பார்த்து கணவனை கொலை செய்த மனைவி..!

கழிவுப்பொருட்களில் இருந்து தயாரிக்கப்பட்ட ராக்கிகள்.. பிரதமருக்கு அனுப்பிய துப்புரவு பணியாளர்கள்..!

வர்த்தக போரை ஏற்படுத்து தன்னை அழித்து கொள்கிறார் டிரம்ப்: பொருளதார நிபுணர் எச்சரிக்கை..!

திருமாவளவன் அரசியலில் இருந்து காணாமல் போய்விடுவார்: ஈபிஎஸ் எச்சரிக்கை

அடுத்த கட்டுரையில்
Show comments