விவசாயிகள ரவுடிகளோடு கம்பேர் பண்ணாதீங்க! – ஸ்டாலினுக்கு எடப்பாடியார் எச்சரிக்கை!

Webdunia
ஞாயிறு, 3 ஜனவரி 2021 (09:40 IST)
தமிழக விவசாயிகளை ரவுடிகளோடு ஒப்புமைப்படுத்தி பேச வேண்டாம் என மு.க.ஸ்டாலினுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல்பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் திமுக கூட்டங்களில் பேசும் மு.க.ஸ்டாலின் அடிக்கடி முதல்வர் எடப்பாடி பழனிசாமி தன்னை விவசாயி என்று குறிப்பிடுவதை, திரைப்படத்தில் நடிகர் வடிவேலு ‘நானும் ரௌடிதான்’ என கூறும் நகைச்சுவை காட்சியோடு ஒப்புமைப்படுத்தி பேசி வருகிறார்.

இதுகுறித்து கண்டனம் தெரிவித்து பேசியுள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி ”தமிழக விவசாயிகளை அரசு குழந்தைபோல பாதுகாத்து வருகிறது. நான் ஒரு விவசாயி என்று கூறுவதை எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் பல மேடைகளில் ‘நானும் ரவுடிதான்’ என கூறிக்கொள்வதாக இகழ்வாக பேசி வருகிறார். உணவிடும் விவசாயிகளை ரௌடிகளோடு ஒப்புமைப்படுத்தி ஸ்டாலின் கீழ்தரமாக பேசி வருகிறார்” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானில் தொடர் குண்டு வெடிப்பு: 3 போலீசார் பலி, எஸ்.பி. படுகாயம்

2026 தேர்தலில் விஜய் வெற்றி பெறுவாரா? வைகோவின் கணிப்பு..!

6 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரின் ஆணுறுப்பை வெட்டிய தந்தை.. அதிர்ச்சி சம்பவம்..

ரூ.500-க்கு எரிவாயு சிலிண்டர்! தேஜஸ்வி யாதவ் கொடுத்த அதிரடி வாக்குறுதி..!

திடீரென வைரலாகும் அண்ணாமலையில் வைரல் வீடியோ.. அப்படி என்ன செய்தார்?

அடுத்த கட்டுரையில்
Show comments