Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுப்பவர்களுடன் எதற்கு கூட்டணி? சட்டப்பேரவையில் ஈபிஎஸ் கேள்வி

Webdunia
திங்கள், 9 அக்டோபர் 2023 (16:11 IST)
தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுக்கும் காங்கிரஸ் கட்சியுடன் ஏன் கூட்டணி வைத்துள்ளீர்கள் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் இன்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இன்று காவிரி நீரை தமிழகத்திற்கு தர கர்நாடக மாநிலத்திற்கு உத்தரவிட வேண்டும் என்ற தீர்மானத்தை முதல்வர் முக ஸ்டாலின்  தாக்கல் செய்த நிலையில் இது குறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

இந்தியா கூட்டணியின் கூட்டத்திற்கு முதல்வர் பெங்களூர் சென்ற போது நட்பின் அடிப்படையில் கர்நாடகாவில் காவிரியில் நீர் கேட்டிருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

அதற்கு பதில் கூறிய அவை முன்னவர் துரைமுருகன் ’பல ஆண்டுகளாக அவர்களிடம் பேசியும் நீர் கிடைக்காததால் தான் நீதிமன்றம் சென்றோம் என்று தெரிவித்தார்.  அப்படி என்றால் அப்படிப்பட்ட கட்சியுடன் ஏன் கூட்டணி வைத்தீர்கள் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கேட்கும்போது ’பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்கு தான் இந்தியா கூட்டணி, கொள்கை அடிப்படையில் அல்ல என துரைமுருகன் பதிலளித்தார்.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வுக்காக அனைத்து கட்சி கூட்டம்: வெற்று விளம்பர மாடல் தி.மு.க அரசின் கபட நாடகம்: விஜய்

மெஸ்ஸியை பிச்சைக்காரனாக மாற்றிய ஏஐ வீடியோ.. ரசிகர்கள் கண்டனம்.!

கட்சி பணிகளுக்கு உதவாதவர்கள் ஓய்வு எடுங்கள்: காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு கார்கே எச்சரிக்கை..!

ரஷ்யாவுக்கு வாருங்கள்.. வெற்றி விழாவை கொண்டாடுவோம்: மோடிக்கு புதின் அழைப்பு..!

இன்று ஒரே நாளில் 2வது முறை அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை: பொதுமக்கள் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments