Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனிமைப்படுத்தப்படுகிறதா வட சென்னை!? – இன்று முதல்வர் உரை!

Webdunia
ஞாயிறு, 7 ஜூன் 2020 (15:10 IST)
தமிழகத்தின் தலைநகர் சென்னையில் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில் இன்று மாலை முதல்வர் எடப்பாடி பழனிசாமி உரையாற்ற உள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. இருப்பினும் நாளுக்கு நாள் தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 20 ஆயிரத்தை தாண்டியுள்ள நிலையில் பலி எண்ணிக்கை 200 ஐ நெருங்கியுள்ளது. சென்னையில் 5 மண்டலங்களில் பாதிப்பு எண்ணிக்கை 2 ஆயிரத்திற்கு மேல் பாதிப்புகள் பதிவாகியுள்ளன.

இந்நிலையில் இன்று மாலை 6 மணிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழக மக்களிடையே உரையாற்ற உள்ளார். சென்னையில் கொரோனா அதிகரித்து வருவதால் அதன் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்படலாம் என பேசப்பட்டு வந்த நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இதுகுறித்து அறிவிக்கலாம்  என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கொரோனா கட்டுப்பாடு தொடர்பான முக்கியமான பல அறிவிப்புகளும் வெளியாகலாம் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கூட்டணியில் இருந்து வெளியேறுகிறதா உத்தவ் தாக்கரேயின் சிவசேனா?

இன்று இரவில் கனமழை பெய்யும்: 22 மாவட்டங்களுக்கு வானிலை எச்சரிக்கை..!

இன்று கார்த்திகை மாத பிரதோஷ வழிபாடு: சதுரகிரியில் குவிந்த பக்தர்கள்..!

3 வருடங்களுக்கு முன் டிரம்ப் ஃபேஸ்புக் கணக்கை முடக்கிய மார்க்.. இன்று திடீர் சந்திப்பு..!

20 வருடங்களாக மூக்கில் இருந்த டைஸ்.. 3 வயது சிறுவனாக இருந்தபோது ஏற்பட்ட பிரச்சனை..!

அடுத்த கட்டுரையில்
Show comments