எங்கள் கூட்டணியால் ஸ்டாலின் தூக்கத்தை இழந்துவிட்டார்: எடப்பாடி பழனிசாமி

Webdunia
செவ்வாய், 26 டிசம்பர் 2023 (14:41 IST)
பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகிய பின் ஸ்டாலின் தூக்கத்தை இழந்து விட்டார் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று நடந்த அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழுவில் பேசினார். மேலும் அவர் பேசியதாவது:
 
பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பதை தெளிவுபடுத்தி விட்டோம், தமிழ்நாடு மக்களுக்கு சலுகைகள் கிடைக்க நாடாளுமன்றத்தில் அதிமுக மட்டுமே போராடியது.
 
அதிமுக தான் சிறுபான்மையினரை அரண் போல காக்கும் கட்சி, மருத்துவ கல்லூரி என பல்வேறு கல்லூரிகளை திறந்தது அதிமுக ஆட்சியில் தான், உயர்கல்வியில் தமிழ்நாடு சிறந்து விளங்க அதிமுக ஆட்சி தான்  காரணம் ” என எடப்பாடி பழனிசாமி பேசினார்,.
 
மேலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு முதல்வர் உடனடியாக சென்றிருந்தால் அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டிருப்பர, நிதியில்லை எனக்கூறி வரும் திமுக அரசு அதனை பெருக்குவதற்கான வழிவகைகளை மேற்கொள்ளவில்லை;
 
தமிழ்நாடு அரசு கேட்ட நிதியை மத்திய அரசு எந்த காலத்திலும் வழங்கியதாக சரித்திரம் இல்லை, மக்கள் நலன் கருதி தமிழ்நாட்டிற்கு தேவையான நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும்” என்றும்  எடப்பாடி பழனிசாமி பேசினார்,
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோடநாடு கொலை வழக்கில் எடப்பாடியாருக்கு தொடர்பு! வழக்குத் தொடரப் போகிறேன்! - செங்கோட்டையனால் பரபரப்பு!

எடப்பாடியை முதல்வராக்கியவன் நான்! கட்சியை ஒருங்கிணைக்கதான் முயன்றேன்! - செங்கோட்டையன் வேதனை!

டெல்லிக்கு பாண்டவகளால் நிறுவப்பட்ட பெயரை வைக்க வேண்டும்.. அமித்ஷாவுக்கு பாஜக எம்பி கடிதம்..!

தொடர்ந்து ஒரே லிமிட்டில் ஏறி இறங்கும் தங்கம்! இனி இதுதான் விலையா? - இன்றைய நிலவரம்!

தேர்தலுக்கு முன்போ, பின்போ யாருடனும் கூட்டணி இல்லை.. பிரசாந்த் கிஷோர் உறுதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments