தயவுசெஞ்சு என் பொண்டாட்டி, புள்ளைய காப்பாத்துங்க! – முதல்வரிடம் கோரிக்கை விடுத்த ஊழியர்!

Webdunia
திங்கள், 13 ஏப்ரல் 2020 (11:06 IST)
ஊரடங்கால் தமிழகத்தின் வேறு பகுதியில் சிக்கிக் கொண்ட ஊழியர் விடுத்துள்ள கோரிக்கைக்கு முதல்வர் பதில் அளித்துள்ளார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. தமிழகத்திலும் ஊரடங்கு அமல்ப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மாவட்ட எல்லைகள் மூடப்பட்டுள்ளதால் மக்கள் பலர் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் வெளியூரில் சிக்கி கொண்டுள்ள ஊழியர் ஒருவர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ட்விட்டர் மூலமாக கோரிக்கை விடுத்துள்ளார். அதில் தனது மனைவி கர்ப்பமாக இருப்பதாகவும், அவருடன் இருக்க முடியாமல் தனியாக வேறு மாவட்டத்தில் தான் சிக்கியுள்ளதாகவும் கூறி தனக்கு உதவுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

அவருக்கு பதிலளித்துள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி “உடனடியாக தங்களை தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்ணை தெரிவிக்கவும் தம்பி. நிச்சயமாக தாயையும், சேயையும் பாதுகாக்கத் தேவையான அனைத்து உதவிகளையும் அரசு செய்து கொடுக்கும்.” என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மனித தலைமுடி ஏற்றுமதியில் ரூ.50 கோடி மோசடி.. சென்னை உள்பட 7 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை..!

2022ல் இறந்த வாக்காளரின் புகைப்படத்திலும் பிரேசில மாடல் அழகி புகைப்படம்.. அதிர்ச்சி தகவல்..!

எலான் மஸ்கின் சம்பளம் ரூ. 82 லட்சம் கோடி: டெஸ்லா பங்குதாரர்கள் இன்று முடிவு எடுக்கிறார்களா?

சென்னை உள்பட 14 மாவட்டங்களில் இன்றிரவு கொட்டப்போகும் மழை: வானிலை எச்சரிக்கை..!

தேர்தல் ஆணையத்தை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்: திமுக கூட்டணி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments