Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஊரடங்கு நீள்கிறதா? தளர்கிறதா? இன்று ஆலோசனையில் முதல்வர்!!

Webdunia
சனி, 29 ஆகஸ்ட் 2020 (09:12 IST)
ஊரடங்கு குறித்து முடிவெடுக்க இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனையில் ஈடுபட உள்ளார். 
 
நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதாலும், தமிழகத்தில் பாதிப்பு உயர்ந்து வருவதாலும் கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில், தமிழகத்தில் ஊரடங்கு அமலில் உள்ளது. குறிப்பாக ஞாயிற்றுகிழமைகளில் முழு பொதுமுடக்கம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 
 
இந்நிலையில் நாளை மறுநாள் ஊரடங்கு முடியும் நிலையில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று மாவட்ட ஆட்சியர்களுடன் காணொளிக்காட்சி வாயிலாக ஆலோசனை நடத்துகிறார். 
 
இதனைத்தொடர்ந்து மருத்துவ குழுவினருடனும் மாலை 3 மணிக்கு  ஆலோசனை நடத்துகிறார். எனவே ஆலோசனை கூட்டம் முடிந்த பின்னர் ஊரடங்கு குறித்து தமிழக அரசு முடிவு செய்து நாளைக்குள் தெரிவிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

இளம் வழக்கறிஞர்களுக்கு மாதம் ரூ.20,000 உதவி தொகை..! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!!

குவைத்தில் பணி நிலைமை, ஊதியம் எப்படி இருக்கும்? அங்கிருக்கும் தமிழர்கள் சொல்வது என்ன?

திங்கள் வரை டைம்.. அதுக்குள்ள கெளம்பிடணும்..! – வெளிமாநில ஆம்னி பேருந்துகளுக்கு காலக்கெடு!

குமரிக்கடலில் சூறாவளி.. மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

14 வயது சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரன்.. 15 வயது சிறுவர்கள் செய்த கொடூர செயல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments