Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படுவது எப்போது?

Webdunia
செவ்வாய், 26 மே 2020 (10:01 IST)
தமிழகத்தில் பள்ளிகளை எப்போது திறக்கலாம் என்பது குறித்து முதல்வர் பழனிசாமி இன்று ஆலோசனை. 
 
தமிழகத்தில் மார்ச் மாதம் நடைபெற இருந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கொரோனா ஊரடங்கால் ஒத்தி வைக்கப்பட்டன. பிறகு அடுத்த மாதம் ஜூன் முதல் தேதியிலிருந்து பத்தாம் வகுப்பு தேர்வுகள் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.    
 
ஆனால் தற்போது நான்காம் கட்ட ஊரடங்கு மே 31 வரை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்த நாளே தேர்வுகள் தொடங்குவதில் உள்ள சிரமங்களை பல கட்சிகளும், மக்களும் கூறி வந்தனர். இந்நிலையில் இன்று முதலைமைச்சருடன் ஆலோசித்த கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தேர்வுகளை ஒத்தி வைத்து புதிய தேர்வு அட்டவணையை வழங்கியுள்ளார்.   
 
அதன்படி ஜூன் 15 ஆம் தேதி முதல் தேர்வுகள் தொடங்க இருக்கின்றன. ஜூன் 15 – மொழிப்பாடம், ஜூன் 17 – ஆங்கிலம், ஜூன் 18 – கணிதம், ஜூன் 22 – அறிவியல், ஜூன் 24 – சமூக அறிவியல், மேலும் ஜூன் 20 விருப்பப்பாடமும், ஜூன் 25 தொழில்கல்வி தேர்வுகளும் நடைபெறும்.   
 
மேலும் விடுபட்ட 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 16 ஆம் தேதியும் 12 ஆம் வகுப்பு எஞ்சிய தேர்வு ஜூன் 18 ஆம் தேதியும் நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதனைத்தொடர்ந்து தற்போது பள்ளிகள் அனைத்தும் தேர்வு எழுதும் வகையில் தயாராக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில், தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்தும், 10 ஆம் வகுப்பு தேர்வு மையங்கள் அமைப்பது குறித்தும் அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் கல்வித்துறை அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்துகிறார் முதல்வர் பழனிசாமி. 
 
இதன் பிறகு தேர்வு மையங்கள் குறித்து பள்ளி திறக்கப்பட இருக்கும் நாள் குறித்தும் தகவல் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராக்கெட்டுகளை உருவாக்கும் மனிதர்களை உருவாக்கியவர் அப்துல் கலாம்! - ஈஷா இன்சைட் நிகழ்ச்சியில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் பேச்சு!

பிறந்த நாள் கொண்டாட்டத்தில் தன்னைத் தானே சுட்டுக் கொண்ட மாணவர்: அதிர்ச்சி சம்பவம்..!

இன்றிரவு 4 மாவட்டங்களில் வெளுத்து கட்டப்போகும் மழை: வானிலை ஆய்வு மையம்..!

2025ஆம் ஆண்டில் எத்தனை நாள் விடுமுறை? தமிழக அரசு அறிவிப்பின் முழு விவரங்கள்..!

பெண் போலீஸை கணவரே வெட்டி கொலை செய்த கொடூரம்.. தந்தைக்கும் படுகாயம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments