Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எடப்பாடி பழனிச்சாமி; முதல்வர்; கூவத்தூர் ரிசார்ட்டில் அதிமுக எம்.எல்.ஏக்கள் கொண்டாட்டம்!

Webdunia
வியாழன், 16 பிப்ரவரி 2017 (12:42 IST)
சசிகலாவுக்கும், ஓ.பன்னீர் செல்வம் அணிக்கும் இடையில் நடைபெற்று வரும் அதிகாரப் போட்டியில் யார் தரப்பு ஆட்சி அமைக்கும் என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் இன்று எடப்பாடி பழனிச்சாமி ஆளுநரை சந்தித்துப் பேசியுள்ளார்.



இதனை தொடர்ந்து, எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக அறிவித்துள்ள ஆளுநர் வித்யாசாகர் ராவ், இன்னும் 15 நாட்களில் அவர் தனது  பெரும்பான்மையை சட்டசபையில் நிரூபிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளார்.
 
இதனையடுத்து எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் கொண்டாட தொடங்கிவிட்டனர். மேலும் இன்று மாலை 4 மணியளவில்  எடப்பாடி பழனிச்சாமிக்கு முதல்வராக பதவியேற்பு விழா நடைப்பெறவுள்ளது.
 
இதனை தொடர்ந்து கூவத்தூர் ரிசார்ட்டில் அதிமுக எம்.எல்.ஏக்கள் அவசர ஆலோசனை மேற்கொண்டுள்ளனர். மக்களவை  துணை சபாநாயகர் தம்பிதுரை தலைமையில் கூட்டம் நடைப்பெற்று வந்த நிலையில், எடப்பாடி பழனிச்சாமிக்கு முதல்வராக  பதவியேற்பு விழா நடைப்பெறவுள்ளதை கேட்டு உற்சாகத்தில் கொண்டாடி வருகின்றனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

என் தலைவிதியை ஏன் இப்படி எழுதினாய்? சிவபெருமானுக்கு கடிதம் எழுதி இளைஞர் தற்கொலை..!

ரகசிய கேமராவுடன் ஸ்மார்ட் கண்ணாடி அணிந்து சென்ற பக்தர்.. திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயிலில் கைது!

கடலூர் ரயில் விபத்தில் இறந்த பள்ளி மாணவர்கள்.. முதல்வர் ஸ்டாலின் நிவாரண அறிவிப்பு..!

நேற்றும் இன்றும் மந்தமான வர்த்தகத்தில் இந்திய பங்குச்சந்தை.. நிப்டி, சென்செக்ஸ் நிலவரம்..!

சரக்கு குடிச்சிருந்தார்.. தமிழும் தெரியல..! வடக்கு கேட் கீப்பர் மீது பொதுமக்கள் புகார்!

அடுத்த கட்டுரையில்
Show comments