Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சேலத்திலிருந்து சென்னை விமான சேவையை நாளை தொடங்கி வைக்கிறார் எடப்பாடி பழனிசாமி

Webdunia
சனி, 24 மார்ச் 2018 (10:48 IST)
சேலம் - சென்னை இடையேயான விமான சேவையை நாளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்.
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள கமலாபுரத்தில் கடந்த 1993-ம் ஆண்டு விமான நிலையம் அமைக்கப்பட்டது. தனியார் நிறுவனம் தனது சேவையை தொடங்கிய சில மாதங்களிலேயே பயணிகளிடம் போதுமான வரவேற்பு இல்லாததால் விமான சேவை நிறுத்தப்பட்டது.
 
இதனையடுத்து மீண்டும் கடந்த 2010 ஆம் ஆண்டு சேலத்தில் விமான சேவை தொடங்கப்பட்டது, ஆனால் அதற்கும் பொதுமக்களிடையே போதிய வரவேற்பு இல்லாததால், மீண்டும் விமான சேவை நிறுத்தப்பட்டது.
 
இந்நிலையில் சிறு விமான நிலையங்களில் போக்குவரத்தை செயல்படுத்தும் வகையில் மத்திய அரசு உதான் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தின் மூலம் குறிப்பிட்ட நகரங்களுக்கு விமான போக்குவரத்தை தொடங்க முதல் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. இதனால் ஏற்படும் நஷ்டத்தை மத்திய, மாநில அரசுகள் குறிப்பிட்ட அளவில் ஏற்றுக் கொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. 
இதனையடுத்து சேலம்-சென்னை இடையே ‘ட்ரூஜெட்‘ விமான நிறுவனம், நாளை முதல் விமான சேவையை தொடங்க உள்ளது. சேலத்தில் விமான சேவையை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை தொடங்கி வைக்கிறார். முதல்வருடன் சபாநாயகர் தனபால், மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் அமைச்சர்கள், எம்.பி.க்கள் ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

சென்னையை பொருத்தவரை கோடைமழை ஒரு வரம்: தமிழ்நாடு வெதர்மேன்

என்னுடன் விவாதிக்க உறுதியாக வரமாட்டார்..! மோடியை சீண்டிய ராகுல் காந்தி.!!

மத்திய அமைச்சர் ஆகிறாரா சௌமியா அன்புமணி.. 2026ல் வேற ஒரு கணக்கு..!

நெல் கொள்முதல் அளவு குறைந்தது ஏன்.? ஆய்வு செய்ய அரசுக்கு அன்புமணி கோரிக்கை..!!

கரை ஒதுங்கும் ஜெல்லி மீன்கள்.! திருச்செந்தூர் கடலில் குளிக்க தடை.!

அடுத்த கட்டுரையில்
Show comments