”வேறொருவர் வீட்டு வாசலில் கோலமிட்டதால் தான் கைது செய்யப்பட்டார்கள்”.. முதல்வர் விளக்கம்

Arun Prasath
செவ்வாய், 7 ஜனவரி 2020 (20:16 IST)
வேறொருவர் வீட்டில் கோலமிட்டது குறித்து வீட்டு உரிமையாளர்கள் புகார் அளித்ததினால் தான் கோலமிட்ட பெண்கள் கைது செய்யப்பட்டார்கள் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.

சமீபத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கோலமிட்ட பெண்களை போலீஸார் கைது செய்து, திருப்பி அனுப்பினர். பின்பு அதனை தொடர்பு தமிழகம் முழுவதும் பல பெண்கள் கோலமிட்டு தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

குறிப்பாக முக ஸ்டாலின், எம்.பி.கனிமொழி ஆகியோரின் வீட்டின் முன்பு குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கோலமிடப்பட்டிருந்தது. மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் எம்.பி.யுமான திருமாவளவனும் கோலமிட்டு தனது எதிர்ப்பை தெரிவித்தனர்.

இந்நிலையில் கோலமிட்ட பெண்கள் கைது குறித்து விளக்கம் அளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி “வேறொருவர் வீட்டு வாசலில் கோலமிட்டது குறித்து வீட்டு உரிமையாளர்கள் புகார் அளித்ததினால் தான், கோலமிட்ட பெண்கள் கைது செய்யப்பட்டனர், தங்கள் வீட்டு வாசலில் கோலம் போட்டிருந்தால் பிரச்சனை இல்லை” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பல அலுவலர்களுக்கு SIR செயலியை இயக்க தெரியவில்லை.. செல்லூர் ராஜூ குற்றச்சாட்டு..!

அமெரிக்க விசா கிடைக்கவில்லை.. மனவிரக்தியில் பெண் டாக்டர் தற்கொலை:

அரசு மருத்துவமனை அருகே கால்வாயில் வீசப்பட்ட பெண் குழந்தை சடலம்! வேலூரில் அதிர்ச்சி சம்பவம்.!

தவெக 'ஆச்சரியக்குறியாக' இருந்தாலும், 'தற்குறியாக' இருந்தாலும் எங்களுக்கு கவலை இல்லை: அமைச்சர் ரகுபதி

என் தலைவர பத்தி தப்பா பேசுவியா?!.. ரோட்டில் உருண்டு புரண்ட திமுக, தவெக தொண்டர்கள்

அடுத்த கட்டுரையில்
Show comments