Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிவகார்த்திகேயனை வாக்களிக்க அனுமதித்த அதிகாரி மீது நடவடிக்கை: சத்யபிரதா சாஹூ

Webdunia
செவ்வாய், 23 ஏப்ரல் 2019 (13:36 IST)
தமிழகத்தில் ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெற்ற மக்களவை தேர்தலின்போது வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால் பலர் வாக்களிக்க முடியவில்லை. வாக்காளர் அடையாள அட்டை இருந்தும் வாக்களிக்க முடியாமல் பலர் ஏமாற்றம் அடைந்தனர்.
 
இந்த நிலையில் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால் வாக்களிக்க அனுமதி மறுக்கப்பட்டவர்களில் ஒருவர் நடிகர் சிவகார்த்திகேயன். சிவகார்த்திகேயன் தன்னை வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் என்று வாக்குவாதம் செய்ததால் இந்த செய்தி மேலிடம் வரை பரவி, சிவகார்த்திகேயனுக்கு சேலஞ்ச் முறையில் ஓட்டு போட தேர்தல் அதிகாரிகள் அனுமதித்தனர். 
 
இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ, 'நடிகர் சிவகார்த்திகேயன் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாத நிலையில் அவரை வாக்களிக்க அனுமதித்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என்று கூறினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பங்குச்சந்தை இன்று ஏற்றமா? சரிவா? சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

6 மணி நேரத்தில் உருவாகும் ஃபெங்கல் புயல்.. மணிக்கு 13 கிமீ வேகம்! இன்றும் ரெட் அலெர்ட்!

கனமழை எதிரொலி: இன்று நடக்கவிருந்த என்னென்ன தேர்வுகள் ஒத்திவைப்பு?

கனமழை எதிரொலி: இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை?

தமிழ்நாட்டில் இன்று 25 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை.. வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments