Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இனி பாஸ்போர்ட் பெற இ-சேவை மையங்களிலும் விண்ணப்பிக்கலாம்

Webdunia
புதன், 23 செப்டம்பர் 2015 (00:28 IST)
தமிழகத்தில் உள்ள இ-சேவை மையங்களில் ஆன்லைன் மூலமாக பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கலாம்.
 

 
இது குறித்து, சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி பாலமுருகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
 
தமிழகம் முழுவதும் 339 இடங்களில் இ-சேவை மையங்கள் செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில், 264 வட்டாட்சியர் அலுவலகங்கள், சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகம், சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டல அலுவலகங்கள் மற்றும் சென்னை, மதுரை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய மண்டல பாஸ்போர்ட் அலுவலகங்கள் என 285 இடங்களில் நிறுவப்பட்டுள்ள இ-சேவை மையங்களில் பாஸ்போர்ட்டுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
 
தமிழ்நாட்டில், தற்போது 8 சேவா கேந்திரா மையங்கள் உள்ளது. வரும் அக்டோபர் மாத இறுதிக்குள் பாண்டிச்சேரியில் 9ஆவது மினி சேவா கேந்திரா மையம் ஏற்படுத்தப்படும்.
 
ஆன் லைனிலேயே அனைத்து ஆவணங்களையும் காவல்துறை அதிகாரிகளுக்கு அனுப்பும் முறை விரைவில் அறிமுகப்படுத்தப்படும். இதன் மூலம், அனைவருக்கும் விரைவில் பாஸ்போர்ட் கிடைக்கும் என்றார். 
 

ஜாபர் சாதிக்கின் மனைவியிடம் அமலாக்கத்துறை விசாரணை! பெரும் பரபரப்பு..!

பாஜகவை வீழ்த்த இது ஒன்று தான் வழி.. 5 கட்ட தேர்தல் முடிந்தபின் கூறும் பிரசாந்த் கிஷோர்..!

அண்ணாமலை போல் அரசியல் செய்யவே ‘காமராஜர் ஆட்சி’.. செல்வப்பெருந்தகை திட்டம்..!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை.! கேரளாவுக்கு சீமான் கண்டனம்.!!

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணி.! சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியது தமிழக அரசு..!!

Show comments