Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிவப்பு சட்ட போட்டவனுக்கு பதில் சொல்ல மாட்டேன்: துரைமுருகன் நக்கல்!

Webdunia
வியாழன், 9 ஜனவரி 2020 (17:33 IST)
துரைமுருகன் அந்த நிருபரைப் பார்த்து, சிவப்பு சட்டை அணிந்தவருக்குப் பதில் அளிக்க மாட்டேன் என பதில் அளித்துள்ளார். 
 
மத்திய அரசின் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என திமுக கட்சி சார்பில் முக ஸ்டாலின் சட்டபேரவை செயளரை சந்தித்து மனு அளித்திருந்தார். 
 
சட்டப்பேரவை கூட்டம் தொடங்கிய நாள் முதலே மனு மீதான விவாதத்திற்கு நேரம் ஒதுக்க கோரி திமுகவினர் கேட்டு வந்தனர். ஆனால் மனு மீதான ஆய்வு நடைபெற்று வருவதாக சபாநாயகர் விளக்கமளித்தார்.
 
சட்டசபை கூட்ட தொடரின் கடைசி நாளான இன்றும் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக திமுக கொண்டு வந்த தீர்மானம் மீது விவாதிக்காமல் இருந்ததை திமுக உறுப்பினர்கள் கண்டித்து வெளிநடப்பு செய்துள்ளனர்.
 
இதுகுறித்து பேசிய திமுக பொருளாளர் துரை முருகன் பேசியதாவது, குடியுரிமை சட்டத்திகு எதிராக தீர்மானம் கொண்டு வர இந்த அரசு அஞ்சுகிறது. ஆண்டாள் அடிமை முறையில், தமிழ்நாட்டில் ஆட்சி நடக்கிறது. இந்த முறையை திமுக வன்மையாகக் கண்டிக்கிறது என பேசினார். 
 
இந்த பேட்டிக்கு முன்னர், சிவப்பு சட்டை அணிந்திருந்த நிருபர் ஒருவர் முந்திக்கொண்டு கேள்வி கேட்க, அதற்கு துரைமுருகன் அந்த நிருபரைப் பார்த்து, சிவப்பு சட்டை அணிந்தவருக்குப் பதில் அளிக்க மாட்டேன், பக்கத்திலிருக்கும் பச்சை சட்டைக்குப் பதில் சொல்கிறேன் என நக்கலாக கிண்டலடித்தார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 தேர்தல்.. அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியலில் செங்கோட்டையன் பெயர் இல்லை.. என்ன காரணம்?

பாஜக அடி வாங்கும் போதெல்லாம் அதிமுக அடிமைகள் காப்பாற்றுகின்றன. திமுக எம்பி ஆவேசம்..!

சீமான் - விஜயலட்சுமி வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும் என்பது ஆணவத்தின் உச்சம்: ப சிதம்பரம்..

எறும்பு கடிச்சி சாவாங்களா? சினிமால கூட பாத்தது இல்ல! - திமுகவை வெளுத்த எடப்பாடி பழனிச்சாமி!

அடுத்த கட்டுரையில்
Show comments