ஆட்சியை கவிழ்ப்பது எங்களுக்கு ஒரு பெரிய வேலையே கிடையாது: துரைமுருகன்

Webdunia
ஞாயிறு, 25 மார்ச் 2018 (15:06 IST)
திமுக மண்டல மாநாடு நேற்றும் இன்றும் ஈரோட்டில் நடைபெற்று வருகிறது. இன்றைய இரண்டாவது நாளில் திமுக தொண்டர்களின் கூட்டம் அதிகம் இருந்தது. இன்று காலை 9மணிக்கு இந்த மாநாடு தொடங்கிய நிலையில் இன்று பல்வேறு தலைப்புகளில் திமுகவின் முன்னணி தலைவர்கள் பேசி வருகின்றனர். நத வகையில் இந்த மண்டல மாநாட்டில் திமுகவின் முதன்மை செயலாளர் துரைமுருகன் தமிழக ஆட்சியை கலைப்பது குறித்து ஆவேசமாக பேசியதாவது:

அதிமுக ஆட்சியை கவிழ்ப்பது ஒன்றும் எங்களுக்கு கடினமான வேலை கிடையாது. ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுக இரண்டாக உடையும் என முன்கூட்டியே எங்கள் தலைவர் கருணாநிதி கூறியிருந்தார் .  ஜெயலலிதா-ஜானகி இருந்த போதே அந்த விவகாரத்தில் தலையிட மறுத்தவர் தலைவர் கருணாநிதி.
அதிமுக ஆட்சியை கவிழ்ப்பது ஒன்றும் எங்களுக்கு கடினமான வேலை கிடையாது.  எதிர்க்கட்சி என்பது எதிர்த்துப் பேசுவது மட்டுமல்ல, தேவைப்பட்டால் ஆலோசனை வழங்குவதற்கும் தான்.

இவ்வாறு துரைமுருகன் பேசினார். சமூக நீதி மற்றும் மதநல்லிணக்க மாநாடாக நடைபெறும் இந்த மாநாடு இன்று மாலையுடன் முடிவடைகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாமல்லபுரத்தை சுற்றி பார்க்க இலவசம்!.. தமிழக அரசு அறிவிப்பு!...

ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்க மாட்டோம்.. திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்: விசிக

எக்ஸ் வலைத்தளம் திடீரென முடங்கியதா? விளக்கம் அளிக்காத எலான் மஸ்க்..!

செங்கோட்டை குண்டுவெடிப்பு சதியில் ‘பிரியாணி’ தான் கோட்வேர்டா? அதிர்ச்சி தகவல்கள்!

ஷேக் ஹசீனாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டன வங்கதேச சர்வதேசத்தின் உள்விவகாரம்: சீனா

அடுத்த கட்டுரையில்
Show comments