Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பல்லுப்போன நடிகர்கள் எல்லாம் இன்னும் நடிக்கிறார்கள்.. ரஜினிக்கு துரைமுருகன் பதிலடி..!

Siva
திங்கள், 26 ஆகஸ்ட் 2024 (07:11 IST)
சமீபத்தில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் , அமைச்சர் துரைமுருகன் குறித்து கூறிய நிலையில் அதற்கு பதிலடியாக அமைச்சர் துரைமுருகன் பல்லு போன நடிகர்கள் எல்லாம் இன்னும் நடிப்பதால் தான் இளைஞர்களுக்கு வாய்ப்பு இல்லை என்று கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நேற்று அமைச்சர் துரைமுருகன் வேலூர் மாவட்டத்தில் நடந்த ஒரு விழாவில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது புத்தக வெளியீட்டு விழாவில் உங்களைப் பற்றி ரஜினிகாந்த் பேசியது குறித்து கருத்து என்ன என்று கேட்டபோது மூத்த நடிகர்கள் எல்லாம் வயதாகி பல்விழுந்து தாடி வளர்ந்து சாகுற நிலைமையில் கூட நடிப்பதால் தான் இளைஞர்களுக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை என்று தனக்கே உரிய நகைச்சுவையுடன் ரஜினியின் பேச்சுக்கு பதில் அளித்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

முன்னதாக ரஜினிகாந்த் புத்தக வெளியீட்டு விழாவில், ‘துரைமுருகன் என்று ஒருவர் இருக்கிறார். அவர் கருணாநிதி கண்ணிலேயே விரலை விட்டு ஆட்டியவர். அவரிடம் ஏதாவது விஷயத்தை செய்ய போகிறோம் என்று சொன்னால், சந்தோஷம்னு சொல்வார். நன்றாக இருக்கிறது என்று சந்தோஷம் என்கிறாரா? அல்லது ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று கூறுகிறாரா? என ஒன்றும் புரியாது. இதற்கு, முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு தலைவணங்குகிறேன்" என்று பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நல்லக்கண்ணு தவறி விழுந்து காயம்.. தொலைபேசி வழியாக உடல்நிலையை விசாரித்த விஜய்..!

கொடைநாட்டிலே நின்றபோது மிஸஸ் ஜெயலலிதா என அழைத்திருப்பீர்களா? விஜய்க்கு சரத்குமார் கேள்வி..!

விஜயகாந்த் இடத்தை விஜய் நிரப்புவார்: தாடி பாலாஜி பேட்டி..!

2வது மனைவியின் பிரசவத்தின் போது முதல் மனைவியிடம் சிக்கிய நபர்! மனித வளத்துறையில் புகார்..!

பிரத்தியேக செயலியுடன் போலீசாருக்கு செல்போன்கள்: கோவை மாநகரக் காவல் துறை!

அடுத்த கட்டுரையில்
Show comments