தனித்து பிரச்சாரம் செய்யும் காங்கிரஸ் கட்சிக்கு எனது பாராட்டு: துரைமுருகன்

Webdunia
ஞாயிறு, 24 ஜனவரி 2021 (15:12 IST)
திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி இம்முறை தனது பிரசாரத்தை தனித்து தொடங்கி இருப்பது அந்த கூட்டணியில் இருந்து அக்கட்சி விலக முடிவு செய்திருப்பதை காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர் 
 
பொதுவாக காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர்கள் தமிழகம் வந்தால் திமுகவில் உள்ள தலைவர்களுடன் இணைந்து பிரசாரம் செய்வது வழக்கமாக இருக்கும். ஆனால் நேற்று தமிழகத்திற்கு காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி வந்தபோது திமுகவினர் அவரை வரவேற்க செல்லவும் இல்லை, அவருடன் பிரச்சாரத்திற்கும் செல்லவில்லை 
 
ராகுல் காந்தி காங்கிரஸ் பிரமுகர்களுடன் தனித்து தேர்தல் பிரச்சாரம் செய்து காங்கிரஸ் கட்சிக்கு வாக்கு கேட்டு வருகிறார். இதிலிருந்து அக்கட்சி திமுக கூட்டணியில் இருந்து விலக முடிவு செய்து விட்டதையே காட்டுகிறது என கூறப்படுகிறது 
 
இந்த நிலையில் தனித்து தேர்தல் பிரச்சாரம் செய்யும் காங்கிரஸ் கட்சிக்கு எனது பாராட்டுக்கள் என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அவர்கள் கூறியிருப்பது அந்த கூட்டணியில் உள்ள பிளவை உறுதிப்படுத்துவதாக தெரிகிறது. அதுமட்டுமின்றி திமுக கூட்டணியில் வேறு சில கட்சிகள் இணைய வாய்ப்பு இருப்பதாக துரைமுருகன் கூறியதிலிருந்து பாமக அந்த கூட்டணியில் இணைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தீபாவளி மது விற்பனை ரூ.500 கோடியை தாண்டுமா? தயாராகிறது டாஸ்மாக்

பாகிஸ்தானில் இருந்து வந்த 200 ட்ரோன்கள் வழிமறிப்பு.. 287 கிலோ ஹெராயின் பறிமுதல்..!

சீனாவுக்காக அமெரிக்காவை உளவு பார்த்த இந்திய வம்சாவளி? - அமெரிக்காவில் அதிர்ச்சி கைது!

இப்படி எல்லாத்தையும் இழந்து நிக்கிறியே நண்பா! புதினுக்காக கண்ணீர் விட்ட ட்ரம்ப்!

ChatGPTல் 18+ கதைகளையும் இனி கேட்கலாம்: சாம் ஆல்ட்மேன் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments